»   »  'இன்னும் நிறைய இளைஞர்களை விவசாயத்துக்கு அழைத்து வரும் இந்தப் படம்!'

'இன்னும் நிறைய இளைஞர்களை விவசாயத்துக்கு அழைத்து வரும் இந்தப் படம்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil
கடைக்குட்டி சிங்கம் நிறைய இளைஞர்களை விவசாயத்துக்கு அழைத்து வரும்!- வீடியோ

கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானதும் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயத்தைத் தேடி வருவார்கள் என்கிறது அந்தப் படக்குழு.

கார்த்தி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கடைக்குட்டி சிங்கம். படத்தின் மையம் விவசாயம்தான். நாயகிகளாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாதம் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

Kadaikkutti Singam speaks to save agriculture

"எப்படி எஞ்ஜினியர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ, அதேபோல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐடி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். கடைக்குட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் பேசப்பட்டுள்ளது," என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

Kadaikkutti Singam speaks to save agriculture

படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்பக் கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார். வெயில், பனி, மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளாராம். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டி சிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால்தான் இந்த டைட்டிலாம். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

Kadaikkutti Singam speaks to save agriculture
English summary
Karthi's Pandiraj directorial Kadaikutti Singam is based on Agriculture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil