'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஷூட்டிங்கில் இப்படியொரு ஸ்பெஷலா?
சென்னை : கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் பாண்டிராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் விவசாயி வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக 'வனமகன்' சாயிஷா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், பழம்பெரும் நடிகையான ஆச்சி மனோரமா வீட்டில் தற்போது நடைபெறுகிறது.

கடைக்குட்டி சிங்கம்
பாண்டிராஜ் இயக்கிய 'கதகளி', 'இது நம்ம ஆளு', 'பசங்க' 2 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

சாயிஷா சைகல்
இந்தப் படத்தில் கார்த்தியுடன் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சூர்யாவின் '2D என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

ஷூட்டிங்
இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்திற்காக ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படமாக்கப்பட்டன.

மனோரமா வீட்டில் ஷூட்டிங்
இந்நிலையில், கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்' படப்பிடிப்பு பழம்பெரும் நடிகையான ஆச்சி மனோரமாவின் வீட்டில் இன்று நடைபெறுகிறது. தி.நகரில் அவருடைய வீடு அமைந்துள்ளது. இன்றைய ஷூட்டிங்கில், கார்த்தி பங்கேற்கும் காட்சிகள் இல்லையாம். மற்ற நடிகர்கள் கலந்துகொள்ளும் காட்சி படமாக்கப்பட இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











