Just In
- just now
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 9 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 16 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 22 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Don't Miss!
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- News
சல்லிசல்லியான அதிமுக பிளான்.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை.. சசிகலா மீது குவிந்த கவனம்!
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரிலீசில் சிக்கல்... கடைக்குட்டி சிங்கத்தோடு மோதுமா, இல்லை பல்பு வாங்குமா தமிழ்ப்படம்?

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் இந்த வாரம் வெளியாவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில், சாயிஷா, சத்யராஜ், பானுப்ரியா, விஜி, ப்ரியா பவானிசங்கர் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.
பொதுவாக பாண்டிராஜ் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். அதிலும், இப்படம் கிராமப் பின்னணியில், விவசாயம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 13ம் தேதி) இப்படம் திரைக்கு வருகிறது. கார்த்தியின் ரசிகர்கள் கடைக்குட்டி சிங்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சிவா படம்:
இது ஒருபுறம் இருக்க, மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ஸ்பூஃப் காமெடி படமாக உருவாகியிருக்கிறது 'தமிழ்படம் 2'. இதன் முதல் பாகமான 'தமிழ்படம்', தமிழ் சினிமாவை நையாண்டி செய்து, பெரும் வெற்றி பெற்றது.

அரசியல் நையாண்டி:
முதல் பாகத்தில் இருந்து வேறுபட்டு, இந்த படத்தில் தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் சமகால அரசியலையும் அதிரடியாக கலாய்த்திருக்கிறார்கள் என்பது அதன் ஒவ்வொரு ப்ரொமோஷன் போஸ்டரிலும் தெரிகிறது. எனவே இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் நாளை (ஜூலை 12ம் தேதி) திரைக்கு வருகிறது.

அனுமதி இல்லை:
ஆனால் தமிழ்படம் 2 படம் நாளை திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டு தேதியை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதி ஒதுக்குதல்:
பொதுவாக தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின்படி, ஒரு வாரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை ரிலீசுக்கு அனுமதிப்பதில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், படத்துக்கு தணிக்கை சான்று பெற்று முதலில் யார் வருகிறார்களோ அவர்களுக்கு தான் தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் தேதியை தருகிறது.

யு சான்றிதழ்:
அந்த வகையில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கடந்த திங்கட்கிழமை யு சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து, அதே நாளில் தமிழ்படம் 2க்கும் ஒரு சில வெட்டுகளுடன் யு சான்று வழங்கப்பட்டது.

தமிழ்படம் 2:
இதனால் முதலில் சென்சார் வாங்கிய கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு அவர்கள் கேட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்கியது. ஆனால் தமிழ்படம் 2 படத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமலேயே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரிய போட்டி:
இதனால் சிவாவின் தமிழ்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஒருவேளை தமிழ்படம் 2 நாளை திட்டமிட்டபடி ரிலீசாகும் பட்சத்தில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துக்கு பெரிய போட்டியாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.