twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடைசி விவசாயி.. விஜய் சேதுபதி, யோகி பாபு கேரக்டர் என்ன தெரியுமா.. மணிகண்டன் ஓப்பன் டாக்!

    கடைசி விவசாயி படம் முழுவதும் காமெடி இருந்துகொண்டே இருக்கும் என இயக்குனர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    கடைசி விவசாயி யதார்த்தமான வாழ்வியல்|KADAISI VIVASAYI - Official Trailer | Nallandi, VIjay Sethupathi

    சென்னை: கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருக்கிறார்கள் என இயக்குனர் மணிகண்டன் கூறியுள்ளார்.

    காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் கடைசி விவசாயி. நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    Kadaisi vivasayi will have full length comedy, says Manikandan

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன், "விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு.

    இந்த சூப்பர் 'ஹீரோ'வும் ஜோக்கர் 'தமிழ்ராக்கர்ஸ்' பிடியில் இருந்து தப்பவில்லை!இந்த சூப்பர் 'ஹீரோ'வும் ஜோக்கர் 'தமிழ்ராக்கர்ஸ்' பிடியில் இருந்து தப்பவில்லை!

    ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று. 20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    Kadaisi vivasayi will have full length comedy, says Manikandan

    85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.

    கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.

    உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள்.

    கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்" என்று தெரிவித்தார்.

    English summary
    Vijay Sethupahty and Yogi Babu have played guest role in Kadaisi Vivasayi, said director Manikandan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X