»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காதல் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பெண்கள் பள்ளி வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக மதுரை செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜெயராணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

எங்கள் பள்ளி 72 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, மிகப் பிரபலமானது. இங்கு மிகச் சிறப்பாக கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான காதல் படத்தில் செயிண்ட் ஜோசப் பள்ளி என்று காட்டப்படுகிறது.

கதைப்படி, ஜோசப் பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியும் (சந்தியா), ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கும் (பரத்) காதலிக்கின்றனர். மாணவி தனது சீருடையுடன் காதலனுடன் ஊரை சுற்றுகிறார். பின்னர் சென்னைக்கு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மாணவியின் வயது குறைவாக இருப்பதால் திருமணத்தைப் பதிவு செய்ய பதிவாளர் மறுக்கிறார். இதனால் கோவிலில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதன் பிறகு பெற்றோர் சென்னைக்குச் சென்று மெக்கானிக்கை அடித்துப் போட்டுவிட்டு மாணவியை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதில் மெக்கானிக பைத்தியம் ஆகிவிடுகிறார். இப்படியாக படத்தில் காட்சிகள் உள்ளனர்.

படத்தில் 6 முறை பள்ளியின் பெயர் காட்டப்படுகிறது. பஸ்சுல் கூட பள்ளியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பள்ளியின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது.

எனவே காதல் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு ரூ. 20 லட்சம் நஷ்டஈடு தரவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விஜயராணி கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம், ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தியா:

இந் நிலையில் சினிமாவில் நடிக்கப் போய்விட்டதால் பள்ளிக்கு ஒழுங்காக வராத சந்தியாவை அவரது பள்ளி டிசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது. சந்தியாவுக்கு டிசி தரப்படவுள்ளதை நாம் இரு வாரங்களுக்கு முன்பே வாசர்களுக்குச் சொன்னது நினைவுகூறத்தக்கது.

சென்னை தி.நகரில் உள்ள அந்தப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் சந்தியா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil