»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
காதல் படத்தில் காட்டப்படும் கிறிஸ்தவதப் பள்ளியின் கட்டடம், பள்ளியின் பெயர் தெரிவது போன்ற காட்சிகள் உள்பட 5 காட்சிகளை நீக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் படத்தால் தங்களது பள்ளியின் பெயர் களங்கப்பட்டுவிட்டதாக மதுரை செயிண்ட் ஜோசப் மகளிர் மேல் நிலைப் பள்ளியின் தாளார்ஜெயராணி வழக்கு தொடர்ந்தார்.

10ம் வகுப்பு படிக்கும்போதே மெக்கானிக்கை காதலிக்கும் கதையைக் கொண்ட காதல் படத்தில் தங்களது பள்ளியின் பெயர் பலமுறைகாட்டப்படுவதாகவும், பள்ளிச் சீருடையை படத்தின் நாயகி அணிந்து வருவதாகவும், இதனால் பள்ளியின் பெயர் கெட்டுவிட்டதாகவும்கூறி ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு கோரியது செயின்ட் ஜோசப் பள்ளி.

இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஷங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று ஷங்கர் உயர் நீதிமன்றத்தில்பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது படத்தின் கேசட்டையும் அவர் நீதிமன்றத்திடம் சமர்பித்தார்.

தனது பதிலில் ஷங்கர் கூறியிருப்பதாவது:

இது கற்பனையான ஒரு வழக்கு. எங்களது படத்தின் காரணமாக அப்பள்ளிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பள்ளிக் கெட்ட பெயர்ஏற்படுத்தும் விதத்தில் எந்தக் காட்சியும் படத்தில் இல்லை.

வளரும் பருவத்தில் காதல் கூடாது என்பதைத்தான் படம் வலியுறுத்துகிறது. மனுதாரரின் பள்ளிச் சீருடை படத்தில் காட்டப்படுவதாககூறப்பட்டால் அது தற்செயலாக நடந்ததாகத்தான் கொள்ள முடியும்.

படத்தில் காட்டப்படும் பள்ளிக் கட்டடம் மனுதாரரின் பள்ளிக் கட்டடமே அல்ல. வேறு ஒரு பள்ளியின் கட்டடம். அந்தப் பள்ளிநிர்வாகத்தின் அனுமதியுடன் அந்தக் காட்சியைப் படம் பிடித்தோம்.

எந்தவித உள்நோக்கத்துடனும் நாங்கள் மனுதாரரின் பள்ளியின் பெயரைப் பயன்படுத்தவில்லை. படத்திற்குத் தடை விதித்தால் பெரும்இழப்பு ஏற்படும். எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ஷங்கர்.

ஷங்கர் கொடுத்த கேசட்டைப் போட்டுப் பார்த்து, எந்தெந்த காட்சிகளை நீக்கச் சொல்கிறீர்கள் என பள்ளியின் சார்பில் ஆஜரானவழக்கறிஞரிடம் நீதிபதி பாலசுப்பிரமணியம் கேட்டார். இதையடுத்து பள்ளியின் வழக்கறிஞர் தியாகராஜன், ஒரு மனுவை தாக்கல்செய்தார்.

அதில், பள்ளியின் பெயரைக் காட்டும் காட்சி, பள்ளியின் கட்டடத்தைக் காட்டுவது, பள்ளியின் பால்கனியில் நின்று கொண்டு காதலனுக்குசந்தியா டாடா காட்டும் காட்சி, பள்ளிச் சீருடையில் மாணவிகள் நடக்கும் காட்சி, சுற்றுலா செல்லும் வேனில் பள்ளியின் பேனர் கட்டப்பட்டகாட்சி ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து இந்த 5 காட்சிகளையும் நீக்குமாறு ஷங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Read more about: chennai, tamil, shankar, kadal, cassette, hc
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil