»   »  'சொல்வதெல்லாம் உண்மை'யைக் கலாய்க்கும் கடவுள் இருக்கான் குமாரு! #KadavulIrukkaanKumaru

'சொல்வதெல்லாம் உண்மை'யைக் கலாய்க்கும் கடவுள் இருக்கான் குமாரு! #KadavulIrukkaanKumaru

Posted By:
Subscribe to Oneindia Tamil

லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மையைக் கிண்டலடிக்கும் விதத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

இது முழுக்க கற்பனையே என்ற முன்னறிவிப்போடு வரும் டீசரில், பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது.

Kadavul Irukkan Kumaru mocks famous talk show

அதில் ஊர்வசிதான் நிகழ்ச்சி நடத்துநர். ஒரு குடும்பத்தின் பிரச்சினையைத் தீர்க்க டிவி நிலையத்துக்கு அழைக்கிறார். ஜிவி பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஆர்ஜே பாலாஜி, ஆனந்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட அங்கே, விசாரணையின்போது எம்எஸ் பாஸ்கரை அடிக்கிறார் ஊர்வசி. அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி களேபரமாகிறது. அனைத்தும் லைவாக காட்டப்படுவதைப் போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

ஊர்வசிக்கு இதில் கோமதி கோபாலகிருஷ்ணன் என்று பெயர். நிகழ்ச்சி இடம் பெறும் டிவி ஒய் தமிழ் தொலைக்காட்சி (லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் தொலைக்காட்சி!)

படம் வெளியானால் இந்தக் காட்சி பரபரப்பாக பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி ஆனந்தி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்காக மொத்தம் 4 டீசர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டாவது டீசர்தான் இந்த பேசுவதெல்லாம் உண்மை.

மற்ற இரு டீசர்களும் வாரத்துக்கொன்றாக வெளியாக உள்ளன.

English summary
One of the teasers of Kadavul Irukkan Kumaru has mocked the famous talk show Solvathellam Unmai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil