»   »  கடவுள் இருக்கான் குமாரு... 3 நாட்களில் ரூ 6.5 கோடி வசூல்!

கடவுள் இருக்கான் குமாரு... 3 நாட்களில் ரூ 6.5 கோடி வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடவுள் இருக்கான் குமாரு படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 6.5 கோடியை வசூலித்துள்ளது தமிழகத்தில்.

அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படம் கடவுள் இருக்கான் குமாரு.


Kadavul Irukkan Kumaru opening week end collection 6.5 cr in Tamil Nadu

ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று 376 அரங்குகளில் வெளியிட்டார் டி சிவா. போட்டிக்கு வேறு படங்கள் இல்லாத நிலையில் சோலோவாக வெளியான இந்தப் படத்துக்கு முதல் மூன்று நாட்களில் நல்ல வசூல் கிடைத்துள்ளது.


மூன்று நாட்களில் மொத்தம் ரூ 6.5 கோடிகளை இந்தப் படம் வசூலித்துள்ளது. பண ஒழிப்பின் பாதிப்பு முழுமையாக நீங்காத இந்த மூன்று நாட்களிலும் இவ்வளவு வசூல் வந்திருப்பதே பெரிய விஷயம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில். அடுத்த வாரமும் கூட பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் கடவுள் இருக்கான் குமாரு கணிசமான கலெக்ஷனைப் பெறும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

English summary
Amma Creations Kadavul Irukkan Kumaru opening week end collection is Rs 6.5 cr in Tamil Nadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil