»   »  கடவுள் இருக்கான் குமாரு... பணக்கவலையை மறக்க வைக்க வரும் சிரிப்புப் படம்!

கடவுள் இருக்கான் குமாரு... பணக்கவலையை மறக்க வைக்க வரும் சிரிப்புப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட சோலோவாக திரைக்கு வந்துள்ளது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கியுள்ள கடவுள் இருக்கான் குமாரு படம்.

ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம், கடந்த வாரம் நவம்பர் 10-ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்புத் திட்டம் காரணமாக மக்கள் போதிய பணம் இல்லாமல் திண்டாடுவதைப் பார்த்து, ஒரு வாரம் தள்ளி இன்று படத்தை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் டி சிவா.

Kadavul Irukkan Kumaru released in 400 screens

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வங்கிகள், ஏடிஎம்களில் படாதபாடு பட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக இந்தப் படம் இருக்கும் என்று தயாரிப்பாளர் சிவாவும், இயக்குநர் ராஜேஷும் கூறியுள்ளனர்.

Kadavul Irukkan Kumaru released in 400 screens

காரணம், இயக்குநர் ராஜேஷ் ஒரு சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட். படம் முழுக்க சிரிப்புத் தோரணம் கட்டியுள்ளாராம். இந்தப் படத்தில் சந்தானம் இல்லை. ஆனால் சிரிப்புக்கு பஞ்சமில்லை எனும் அளவுக்கு ஆர் ஜே பாலாஜி கலக்கியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kadavul Irukkan Kumaru released in 400 screens

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் நடித்த படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. போட்டிக்கு வேறு படமே இல்லாமல் வெளியாகியுள்ளதால், படத்தின் வசூல் ஸ்டெடியாக இருக்கும் என கணித்துள்ளனர் பாக்ஸ் ஆபீசில்.

English summary
Kadavul Irukkan Kumaru has released today in around 400 theaters in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil