Don't Miss!
- News
74வது குடியரசு தினம்: டெல்லியில் கொடியேற்றுகிறார் ஜனாதிபதி.. சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர்!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அதிர்ச்சி.. பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: காதல் தேசம் படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்.
Recommended Video
பிரபுதேவா மற்றும் ராஜு சுந்தரத்தின் குழுவில் நடன கலைஞராக இருந்தவர் கூல் ஜெயந்த்.
பீஸ்ட்
படக்குழு
மீண்டும்
ஜார்ஜியா
செல்ல
இது
தான்
காரணமா...வெளியான
முக்கிய
அப்டேட்
நடன இயக்குநர் கூல் ஜெயந்த்தின் திடீர் மறைவு சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூல் ஜெயந்த் மறைவு
பிரபல நடன இயக்குநரும் நடிகருமான கூல் ஜெயந்த் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு செய்தி சினிமா உலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

முஸ்தபா முஸ்தபா
இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார் கூல் ஜெயந்த். அந்த படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை மற்றும் முஸ்தபா முஸ்தபா பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

பிரபுதேவா டீம்
பிரபல நடன சகோதரர்களான பிரபுதேவா மற்றும் ராஜுசுந்தரம் மாஸ்டர்களின் அணியில் நடன கலைஞராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த். காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமான இவர் கலாபாவன் மணி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான பாம்பூ பாய்ஸ் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். அதன் பிறகு மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்கள் பலவற்றுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

நடிப்பின் மீது ஆர்வம்
நடன இயக்குநர்கள் பலரும் நடிகர்களாக மாறியுள்ளனர். பிரபுதேவா, ராஜுசுந்தரம், ராகவா லாரன்ஸ் என ஏகப்பட்ட உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 800 படங்களுக்கு மேல் நடன கலைஞராக பணியாற்றிய கூல் ஜெயந்த் Kozhi Raja எனும் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

சோகத்தில் திரையுலகம்
பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் கூல் ஜெயந்தின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.