twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலிக்க நேரமில்லை திரைக்காவியம்: பொன்விழா கொண்டாட்டம்

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழ் திரை உலகின் காவியமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் காதலிக்க நேரமில்லை படத்தின் பொன்விழா ஆண்டை இன்று சென்னையில் கொண்டாடுகின்றனர்.

    இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' முழு நீள நகைச்சுவை கலந்த காதல் படம். இந்தப் படத்துக்கு தற்போது வயது 50.

    நகைச்சுவை படம் என்கிற பெயருக்கே ஒரு தனித்த அடையாளத்தை தமிழ்ச் சினிமாவில் பெற்றுள்ள ஒரே படம் இதுதான்..

    ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் என்று பலரது நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு இனிமையான இசையை அமைத்திருந்தார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள் இன்று மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. 1960-களில் வெளிவந்த பல படங்கள் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக இன்றும் மிளிர்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் காதலிக்க நேரமில்லை.

    ரசிக்க வைக்கும் காதலிக்க நேரமில்லை

    ரசிக்க வைக்கும் காதலிக்க நேரமில்லை

    இப்போது வரையிலும் காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் ஏதாவதொரு தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

    நகைக்சுவை காதல் கதை

    நகைக்சுவை காதல் கதை

    முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் நகைச்சுவைக் காதல் கதையை கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார்.

    நாகேசின் பேய் கதை

    நாகேசின் பேய் கதை

    முத்துராமனும் ரவிச்சந்திரனும் செய்யும் காமெடி கலாட்டாக்கள், அவர்களுக்கு இணையாக காமெடி செய்யும் காஞ்சனா, ராஜஸ்ரீ, ‘சினிமா எடுக்கிறேன்' என்று பாலையாவுக்கு நாகேஷ், பேய் கதை சொல்லும் காட்சி இன்றைக்கும் நம்பர் நகைச்சுவைக் காட்சியாக உள்ளது.

    இன்னிசை விருந்து

    இன்னிசை விருந்து

    இந்தக் காவியத்தை இசை மூலம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெருகேற்றினார்கள். ‘மாடி மேலே' , ‘என்ன பார்வை', ‘ உங்கள் பொன்னான கைகள்', ‘அனுபவம் புதுமை', ‘ நாளாம் நாளாம்', ‘மலரென்ற முகமொன்று', ‘காதலிக்க நேரமில்லை', ‘ நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா' ஆகிய எட்டுப் பாடல்களும் இன்றும் என்றும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் பாடல்கள்.

    பொன்விழா ஆண்டில்

    பொன்விழா ஆண்டில்

    1964-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வெளியான இந்தப் படம் இப்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதற்கான இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இந்த விழாவில் காதலிக்க நேரமில்லை படத்தில் பங்கெடுத்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    180 முறை பார்த்த படம்

    180 முறை பார்த்த படம்

    அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம் இது. இதுவரைக்கும் இந்தப் படத்தை 180 முறை பார்த்திருக்கிறேன் என்று நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை இடம் பெற்ற படமும் இதுதான்.

    ரசிகர்களுக்கு விருந்து

    ரசிகர்களுக்கு விருந்து

    இப்போது இந்தப் படத்துக்கு விழா எடுக்கிறோம். இந்தப் படத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் விழாவில் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். விழாவில் காதலிக்க நேரமில்லை படப் பாடல்கள் ஆர்கெஸ்ட்ரா மூலம் இசைக்கப்படும். இடையிடையே படத்தின் காட்சிகள் திரையிடப்படும்" என்றார்.

    English summary
    Kadhalikka Neramillai 50th year Celebration on 16th august at Kamarajar arangam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X