Don't Miss!
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கைதி இந்தி ரீமேக்... ஹீரோ யார் தெரியுமா ?
மும்பை : கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப் பட்டுள்ளது.
கைதி திரைப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவ்கனின் அஜய் தேவ்கான் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரிக்கிறது.
தர்மேந்திரா சர்மா படத்தை இயக்கும் இத்திரைப்படத்தில் அஜய் தேவ் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கைதி
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

கைதி ரீமேக்
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் கைதி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு போலா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் அஜய்தேவ் கன் நடிக்க உள்ளார். கைதி திரைப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவ்கானின் அஜய் தேவ்கான் ஃபிலிம்ஸுடன் இணைந்து இந்தி ரீமேக்கை தயாரிக்கிறது. தர்மேந்திரா சர்மா படத்தை இயக்குகிறார்.

மும்பைகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியில் உருவாகும் மாநகரம் படத்துக்கு மும்பைகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முனிஷ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

விக்ரம்
இரண்டாவது படம் கைதியின் ரீமேக்கை பணியை நேற்று முதல் தொடங்கியுள்ளனர். மூன்றாவது படம் மாஸ்டரை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசிலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.