வாவ்.. முதல் நாளிலேயே 'பெத்த' கலெக்ஷன் பார்த்த கைதி.. எவ்வளவுன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: கைதி திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. ஹீரோயின் இல்லாமல் உருவாகியிருக்கிறது கைதி.
இந்நிலையில் கைதி படம் குறித்து நெட்டிசன்கள் நல்ல மாதிரியான கருத்துக்களையே கூறி வருகின்றனர். கார்த்தியின் கைதியும் விஜயின் பிகிலும் ஒன்றாக ரிலீஸானது.

5.5 கோடி வசூல்
பிகில் படத்தை காட்டிலும் கைதி படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முதல் நாளான நேற்று தமிழகத்தில் மட்டும் சுமார் 5.5 கோடி வசூல் செய்து இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல வசூல்
சென்னையில் மட்டும் சுமார் 42 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 300 தியேட்டர்களில் கைதி படம் ரிலீஸான நிலையில் முதல் நாளிலேயே நல்ல வசூலை பெற்றிருப்பதாக தெரிகிறது.

அதிகரிக்கப்படும்
அதிக திரையரங்குகள் பிகில் திரைப்படத்தை ரிலீஸ் செய்திருப்பதால் கைதி திரைப்படம் குறைவான திரையரங்குகளில்தான் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் பிகில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுவதால் வரும் நாட்களில் கைதி படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

வசூலை குவிக்கும்
தற்போது கைதி படம் ஹவுஸ்ஃபுல்லாகி படத்திற்கான டிக்கெட் கிடைக்கவில்லை ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகள் அதிகரிக்கப்படும் பட்சத்தில் படம் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











