ஜப்பானில் ரிலீஸ் ஆகும் கார்த்தியின் கைதி படம்... என்ன டைட்டில்னு பாருங்க!
சென்னை: கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டான கைதி திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. ஆக்ஷன், கிராமத்து கதை என எந்த மாதிரியான ரோல் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
கார்த்தி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. இந்தப் படத்தை மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

நல்ல வரவேற்பு
இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

கைதி 2 படம்
இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கைதி 2 படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கைதி படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஜப்பானில் ரிலீஸ்
இந்நிலையில் கைதி படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கைதி படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஜப்பானிய வெர்ஷன் 'கைதி டில்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி ஜப்பானில் திரைக்கு வர உள்ளது.

கார்த்தியின் முதல் படம்
மேலும் இந்த படம் ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படும் நடிகர் கார்த்தியின் முதல் படமாக இருக்கும். கார்த்தி, நரேன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கைதி', பரோலில் உள்ள கைதியை அடிப்படையாகக் கொண்டது.

சாம் சிஎஸ் இசை
எஸ் ஆர் பிரபு மற்றும் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். இந்தப் படத்தில் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், விஜய் டிவி தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











