»   »  விரைவில் பெரியம்மா ஆகப் போகும் காஜல் அகர்வால்

விரைவில் பெரியம்மா ஆகப் போகும் காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை காஜல் அகர்வால் பெரியம்மா ஆகப் போகிறாராம்.

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அக்கா வழியில் நடிகையானார். ஆனால் அவருக்கு காஜல் போன்று மார்க்கெட் இல்லை. இதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் அதிபர் கரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Kajal Agarwal is going to become aunt soon

இந்நிலையில் தற்போது நிஷா கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது. நிஷா கர்ப்பமாக இருப்பதை காஜல் அகர்வால் உறுதி செய்துள்ளார். தான் விரைவில் பெரியம்மா ஆகப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பிணி நிஷாவின் வயிற்றில் அவரின் கணவரும், காஜலும் கை வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

படங்களில் பிசியாக இருப்பதால் திருமணம் பற்றி நினைக்க நேரம் இல்லை என்கிறார் காஜல்.

English summary
Actress Kajal Agarwal has confirmed that her sister Nisha is pregnant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil