»   »  போதைப் பொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது: நடிகரிடம் 11 மணிநேரம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது: நடிகரிடம் 11 மணிநேரம் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: போதைப் பொருள் வைத்திருந்ததற்காக நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜராக உள்ளவர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி. அவருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ என்று ஹைதராபாத் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

கஞ்சா

கஞ்சா

ஜானி ஜோசபின் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ஜானி ஜோசபை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நவ்தீப்

நவ்தீப்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நவ்தீப் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 11 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

போதை

போதை

எனக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. மேலும் போதைப் பொருள் பயன்படுத்தும், விற்பனை செய்யும் யாருடனும் தொடர்பும் இல்லை என்கிறார் நவ்தீப்.

குற்றவாளி

குற்றவாளி

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜீஷான் அலி கானுடனான தொடர்பு குறித்து நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கானை இவென்ட் மேனேஜராக மட்டுமே தெரியும் மற்றபடி எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று நவ்தீப் தெரிவித்துள்ளார்.

English summary
Puttkar Ronson Joseph alias Johny Joseph alias Ronny, belonging to the entertainment industry, who is also Tollywood actor Kajal Agarwal’s manager in the Telugu film industry, was arrested on Monday by Hyderabad police and narcotic substances were recovered from his possession.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil