இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால்: குதிரையில் கெத்தாக ரீ-என்ட்ரி கொடுத்து அசத்தல்

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குப் பிறகு இந்தியன் 2 படத்திற்காக ரெடியாகி வருகிறார் காஜல் அகர்வால்.

மீண்டும் தொடங்கியது இந்தியன் 2

மீண்டும் தொடங்கியது இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு, சில மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. கிரேன் விபத்து, பட்ஜெட் விவகாரம் போன்றவைகளால் அப்படியே கிடப்பில் கிடந்த இந்தியன் 2, தற்போது மீண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்கனவே ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா நடிக்கத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் கமல்ஹாசனும் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். சென்னையின் முக்கியமான பகுதிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தியன் 2வில் காஜல் அகர்வால்

இந்தியன் 2வில் காஜல் அகர்வால்

இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் கமிட் ஆகியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுபோன நிலையில், காஜலுக்கு 2020ம் ஆண்டு திருமணமும் நடைபெற்றது. கெளதம் சிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வாலுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. இதனால் ஓய்வில் இருக்கும் காஜல் இந்தியன் 2வில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த காஜல் அகர்வால், விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என கூறியிருந்தார்.

குதிரையேறிய காஜல் அகர்வால்

குதிரையேறிய காஜல் அகர்வால்

இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்காக காஜல் அகர்வால் வேகமாக தயாராகி வருகிறார். இதற்காக குதிரையேற்றம் செய்து பயிற்சி செய்யும் வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், குழந்தை பிறந்த பிறகு மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி வருவது குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார். "4 மாதங்களுக்குப் பிறகு திரும்பிய எனக்கு எல்லாமே புதிதாக தொடங்குவது போல் இருக்கிறது. என் உடல் முன்பு இருந்ததைப் போல இப்போது இல்லை. குழந்தை பிறந்து பிறகு பழையபடி வலிமையாக திரும்புவது கொஞ்சம் கடினமாக உள்ளது. உடற்பயிற்சிகளை செய்ய எனது உடல் ஒத்துழைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில்

விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில்

மேலும், "நமது உடல்நிலை மாறியிருக்கும், மாறும், இனியும் மாறலாம். ஆனால், எனது உத்வேகம் ஒருபோதும் மாறாது. ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருக்கிறேன், இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் பயிற்சியில் இருக்கிறேன். புதிய வேலைகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். திரையுலகில் தொடர்ந்து இயங்குவதில் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்" என பதிவிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் இந்தப் பதிவு இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதை உறுதிசெய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X