இந்தியன் 2 லிருந்து விலகினேனா யார் சொன்னது?...நச்சு பதிலுடன் அப்டேட் கொடுத்த காஜல் அகர்வால்

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் இந்தியன் 2. பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது.

படத்தின் 40 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், கொரோனா, லாக்டவுன், வழக்கு போன்ற பல காரணங்களால் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது ஷுட்டிங் துவங்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆனால் இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படம் எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். ஆனால் டைரக்டர் ஷங்கர், தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை பிஸியாக இயக்கி வருகிறார்.

 அமெரிக்க செல்லும் கமல்

அமெரிக்க செல்லும் கமல்

இதற்கிடையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அங்கு இந்தியன் 2 படத்தில் தான் நடிக்கும் வயதான கேரக்டருக்கு பொருந்து வகையிலான மேக்அப் போடுவதற்காக ஹாலிவுட் மேக்அப் மேன்களுடன் ஆலோசனை நடத்த கமல் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 3 வாரங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியதும், இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கில் கமல் பங்கேற்க உள்ளதாக சொல்லப்பட்டது.

காஜல் அகர்வால் கிடையாதா

காஜல் அகர்வால் கிடையாதா

இந்தியன் 2 படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அவருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்தது. இதனால் அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டதாலும் அவர்களுக்கு பதில் நடிக்க உள்ளவர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனசொல்லப்பட்டது.

காஜல் அகர்வாலுக்கு பதில் இவரா?

காஜல் அகர்வாலுக்கு பதில் இவரா?

இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் டாப் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்பட்டது.

 செம அப்டேட் தந்த காஜல்

செம அப்டேட் தந்த காஜல்

இந்த சமயத்தில் இன்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பேசிய காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் சிலர் இந்தியன் 2 படம் பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் இருந்து நான் விலகியதாக யார் சொன்னது? நாங்கள் செப்டம்பர் 13 ம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க போகிறோம் என அப்டேட் கொடுத்துள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்பட சந்தோஷம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் காஜல் அகர்வால் மாற்றப்படவில்லை என்ற சந்தோஷம். காஜல் அகர்வாலுக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என வதந்திகளுக்கும், இந்தியன் 2 ஷுட்டிங் துவங்கப்படுமா அல்லது கைவிடப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கும் இவரது பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டிரெண்டிங்கில் கொண்டாடும் ரசிகர்கள்

டிரெண்டிங்கில் கொண்டாடும் ரசிகர்கள்

இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் ட்விட்டரில் #KajalAggarwal, #Indian2 ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளன. அதிகமான ரசிகர்கள் காஜல் அகர்வாலின் பேட்டியை பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X