எந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா?
சென்னை : ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் டாப் 16 இந்தியப் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?
ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய தேதியில் டாப் இடங்களைப் பிடித்திருக்கும் இந்தியப் பிரபலங்களைப் பார்க்கலாம்.
16-வது இடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். காஜல் அகர்வால், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பிடித்திருக்கும் இடம் எது தெரியுமா?

16. ஏ.ஆர்.ரஹ்மான் :
இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் டாப் ஃபாலோயர்ஸ் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கிறார். அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 21 மில்லியன்.

15. காஜல் அகர்வால் :
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால்தான் தமிழ் நடிகைகளில் இந்தப் பட்டியலில் நுழைந்திருக்கும் ஒரே நபர். இதுவரை 50 படங்களில் நடித்திருக்கும் இவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை - 23.2 மில்லியன்.

14. ஷாருக் கான் :
பாலிவுட்டில் முன்னணி ஸ்டாராக விளங்கும் ஷாருக்கானை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 23.4 மில்லியன்.

13. சோனாக்ஷி சின்ஹா :
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ஃபேஸ்புக்கில் 23.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

12. அக்ஷய்குமார் :
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 23.6 மில்லியன்.

11. மாதுரி தீட்சித் :
தனது நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 25.7 மில்லியன்.

10. கபில் ஷர்மா :
ஸ்டாண்ட்-அப் காமெடியனாகப் பட்டையைக் கிளப்பி தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் கபில் ஷர்மாவை ஃபேஸ்புக்கில் 25.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

9. ஸ்ரேயா கோஷல் :
தேவதைக் குரலால் சொக்கவைக்கும் பாடகி ஸ்ரேய கோஷலைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 26.9 மில்லியன்.


Click it and Unblock the Notifications











