Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களை சூடாக்கிய காஜல் அகர்வால்... ஒரேயொரு லிப் லாப் கிஸ்... அதுவும் யார்கூடன்னு பாருங்க!
தைபே:
தமிழ்,
தெலுங்கு
திரையுலகில்
முன்னணி
நடிகையாக
கலக்கி
வருகிறார்
காஜல்
அகர்வால்.
சினிமாவில்
பிஸியான
நடிகையாக
வலம்
வந்த
போதே
கெளதம்
கிட்ச்லு
என்பவரை
திருமணம்
செய்துகொண்டார்.
காஜல்
அகர்வாலுக்கும்
கெளதம்
கிட்ச்லுவுக்கும்
2020ம்
ஆண்டு
திருமணம்
நடைபெற்ற
நிலையில்,
சில
மாதங்களுக்கு
முன்னர்
குழந்தையும்
பிறந்தது.
இந்நிலையில்,
தற்போது
சீனா
சென்றுள்ள
காஜல்
அகர்வால்
அங்கு
கிறிஸ்துமஸ்
கொண்டாடிய
புகைப்படங்களை
தனது
இன்ஸ்டாவில்
ஷேர்
செய்துள்ளார்.
அம்மாவைப்
போலவே
அழகு..முதல்
முறையாக
குழந்தை
முகத்தை
ரசிகர்களுக்கு
காட்டிய
காஜல்
அகர்வால்!

ரசிகர்களின் பேரரசி
மும்பையைச் சேர்ந்த காஜல் அகர்வால் இந்தியில் வெளியான கியூன் ஹோ கயா நா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார். ஆனால், அப்போது அதிகம் கவனம் பெறாத காஜல், தெலுங்கில் 2007ம் ஆண்டு ரிலீஸான லக்ஷ்மி கல்யாணம் படத்தில் நடித்து பிரபலமானார். அதேபோல் தமிழில் பரத் நடித்த 'பழனி' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ச்சியாக காஜல் தெலுங்கில் நடித்த மஹதீரா, டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பெக்ட், பிஸினஸ் மேன் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சீனாவில் காஜல்
அதேபோல், சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா, தனுஷுடன் மாரி, அஜித்துடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டிலும் டாப் நடிகையாக மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல், தமிழில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் நடித்து வருகிறார். இதனிடையே 2020ம் ஆண்டில் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டு மேரேஜ் லைஃப்பிலும் செட்டில் ஆகிவிட்டார். சில மாதங்களுக்கு முன்னர் குழந்தையையும் பெற்றெடுத்த காஜல், தற்போது சீனாவில் ரவுண்டு அடித்து வருகிறார்.

இதுதான் லிப் லாக்
சீனாவின் தைபே பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், அங்கு தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு தனது மகன் நீல் கிட்ச்லுவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். ஷாப்பிங் மால் ஒன்றில் தனது மகனை நடக்க வைக்க முயற்சிக்கும் காஜல், நீல் கிட்ச்லுவின் ஒவ்வொரு அடியும் மேஜிக் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல் இன்னொரு போஸ்ட்டில் எங்கள் இதயங்களை பறக்கவிடுகிறோம் என்ற கேப்ஷனுடன் தனது மகனை மேலே தூக்கிப் போட்டு பிடிக்கிறார் காஜல். இதனையடுத்து அவர் ஷேர் செய்த போஸ்ட் தான் வைரலாகி வருகிறது.

சூடாக்கிய ரசிகர்கள்
அதில் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்ச்லுவின் கையில் மகன் நீல் கிட்ச்லு இருக்கிறார். அப்போது கெளதமை கட்டிப் பிடித்து லிப் லாக் கிஸ் கொடுக்கிறார் காஜல் அகர்வால். கிறிஸ்துமஸ் கிஃப்ட்டாக காஜல் அகர்வால் கொடுத்த லிப் லாக் கிஸ், அவரது ரசிகர்களை சூடாக்கியுள்ளது. மேலும் பலர் காஜலுக்கும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடும்பத்துடன் க்யூட்டாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஜல் அகர்வாலின் இன்ஸ்டா போட்டோஸ் தொடர்ந்து வைரலாகி வருகிறது.