Just In
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 3 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹனிமூன் ட்ரிப்புக்கு 5 பைசா செலவழிக்காத காஜல்.. நடிகைகள் மாலத்தீவு விசிட்டுக்கு இதுதான் காரணமாமே!
சென்னை: தனது ஹனிமூன் ட்ரிப்புக்கு நடிகை காஜல் அகர்வால் ஐந்துபைசா கூட செலவழிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நடிகை காஜல் அகர்வால், மும்பை தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்தார்.
இருவீட்டு குடும்பத்தினரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தொழிலதிபர் கிட்சிலு
இவர்கள் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கோலாகலமாக நடந்தது. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காஜல், திருமணம் செய்திருக்கும் தொழிலதிபர் கவுதம் கிட்சிலு, இன்டீரியர் டெக்கரேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

புது வீட்டில்
திருமணம் முடிந்த கையோடு, புதிய வீட்டில் குடியேறினார் காஜல். இதற்கான கிரகப்பிரவேசத்தில் காஜல் அகர்வால், கவுதம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் கொரோனா காரணமாக அவர்கள் ஹனிமூன் செல்லமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் ஹனிமூனுக்கு சென்றனர்.

அண்டர் வாட்டர் ஓட்டல்
இந்த ஹனிமூன் ட்ரிப்பில் நடிகை காஜல் தங்கி இருந்தது, உலகின் முதல் அண்டர்வாட்டர் ஓட்டலான, முரகாவில். கடல் மட்டத்தில் இருந்து 16 அடிக்கு கீழே இந்த ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் தங்குவதற்காக ஒருநாள் வாடகை மட்டுமே கணக்கு வழக்கில் சிக்காத லட்சங்கள் என்கிறார்கள்.

இலவச அழைப்பு
ஆனால், காஜல் தனது ஹனிமூனிக்காக ஐந்து பைசா கூட செலவழிக்கவில்லையாம். மாலத்தீவு அரசு, சுற்றுலாவை பிரபலபடுத்த இலவசமாகவே அங்கு அழைத்திருக்கிறது என்கிறார்கள். விமான டிக்கெட், சாப்பாடு, தங்குமிடம் உட்பட அனைத்தும் ஃபிரியாம்.

16 மில்லியன்
அதாவது இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்களுக்கு இந்த இலவசத்தை அறிவித்து இருக்கிறதாம், மாலத்தீவு அரசு. ஆனால், காஜல் 16 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு இப்படி வாய்ப்பாம்.

இந்த ஓசி டிரிப்
சமீபத்தில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகைகள் திடீரென மாலத்தீவுக்கு விசிட் அடித்ததற்கு காரணமும் இதுதான் என்கிறது மும்பை மீடியா. மாலத்தீவு அரசின் அழைப்பின் பேரில்தான் இந்த ஓசி டிரிப் என்கிறார்கள். ஆனால், இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகைகள் எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.