»   »  ஜீவா உடன் இணைந்த காஜல் அகர்வால்!

ஜீவா உடன் இணைந்த காஜல் அகர்வால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவலை வேண்டாம் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கவிருக்கும் இப்படத்துக்கு 'கவலை வேண்டாம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

'கோ', 'யான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஆர்.எஸ் இன்போடையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீவா.

ஜீவா – கீர்த்தி சுரேஷ்

ஜீவா – கீர்த்தி சுரேஷ்

கவலை வேண்டாம் படத்தில் ஜீவா உடன் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஜீவா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

விலகிய கீர்த்தி சுரேஷ்

விலகிய கீர்த்தி சுரேஷ்

படப்பிடிப்புக்கான தேதிகள் குளறுபடியால் கீர்த்தி சுரேஷ் விலகினார். விரைவில் புதிய நாயகி ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இந்நிலையில், கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக தற்போது நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக இயக்குநர் டி.கேகூறியுள்ளார். இவர் இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

ஜீவா – காஜல் அகர்வால்

ஜீவா – காஜல் அகர்வால்

ஜீவா சாரும், காஜல் அகர்வாலும் எனக்கு நல்ல பழக்கம். கதை கரு உருவானவுடன் ஜீவா சார் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்தேன். ஆனால், முழுக் கதையும் தயாராகும் வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.

எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்கும் பிடிக்கும்

இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும் வகையில், நான் எதிர்பார்க்கும் நடிப்பை உடல் மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

காஜல் அகர்வால் சம்மதம்

காஜல் அகர்வால் சம்மதம்

கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சி அமைப்புகள், மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான் நடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்கிறார் இயக்குநர்.

English summary
Director Deekay is set to direct Jiiva, in his next film titled Kavalai Vendam. Kajal Aggarwal has been signed on as the female lead. Earlier, Keerthi Suresh was brought on board, and the first look of the film featuring Jiiva and Keerthi too, was released. Now, it looks like Keerthi is not a part of this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil