»   »  தனுஷின் விஐபி2: குட்பை சொல்லிவிட்டு கிளம்பிய கஜோல்

தனுஷின் விஐபி2: குட்பை சொல்லிவிட்டு கிளம்பிய கஜோல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 படத்தின் தனது பகுதிகளை நடித்து முடித்துவிட்டார் கஜோல்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்து வரும் படம் விஐபி 2. விஐபி ஹிட் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் இறந்துவிட்ட சரண்யாவும் இந்த பாகத்தில் உள்ளார்.

And it's a wrap ! Just finished my last sched ! Will miss u guys

A post shared by Kajol Devgan (@kajol) on Mar 10, 2017 at 4:18am PST

இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் வில்லியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இதை கஜோல் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மின்சார கனவு படத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து கஜோல் தமிழ் படத்தில் நடித்துள்ளார். முதலில் ஹீரோயினாக கோலிவுட் வந்தவர் தற்போது வில்லியாக வந்துள்ளார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Kajol has completed her portion in Dhanush starrer VIP 2 being directed by Soundarya Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil