»   »  வெற்றிகரமாக 50 வது நாளைத் தொட்ட காக்கா முட்டை

வெற்றிகரமாக 50 வது நாளைத் தொட்ட காக்கா முட்டை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 சிறுவர்களின் இயல்பான வாழ்கையை அழகாக எடுத்துச் சொன்ன காக்கா முட்டை திரைப்படம் வெற்றிகரமாக 50 வது நாளைத் தொட்டு இருக்கிறது, கடந்த ஜூன் மாதம் 5 ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் இன்று 50 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

பெரிய நடிகர்கள் இல்லை மற்றும் பட்ஜெட் பெரிதாக இல்லை போன்று நிறைய இல்லைகள் படத்தில் இருந்தாலும் கூட, படம் வெற்றிப் படமாக மாறி உண்மையிலேயே நல்ல படம் தான் என்று ரசிகர்கள் அனைவரையும் ஆமாம் சொல்ல வைத்திருக்கிறது காக்கா முட்டை.அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த திரைப்படம் காக்கா முட்டை, உலகம் முழுவதும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை விளம்பரம் செய்து வெளியிட்டது.


2 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் வசூலிலும் குறை வைக்கவில்லை, இதுவரை உலகம் முழுவதும் சுமார் 12 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்து இருக்கிறது.


விருதுகள் பெரும் படம் பாக்ஸ் ஆபிசில் படுத்துவிடும் என்ற கூற்றை முதலில் உடைத்து எறிந்த திரைப்படம் காக்கா முட்டை, இன்றைய நாட்களில் ஒரு திரைப்படம் 1 வாரம் ஓடினாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் போது காக்கா முட்டை 50 நாட்களைத் தொட்டது உண்மையிலேயே பெரிய சாதனைதான்.


நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்...


English summary
Today Kakka Muttai Movie Entered 50th day.
Please Wait while comments are loading...