»   »  ஸ்டார் ஹோட்டலில் சமரசம்... சூர்யா விவகாரம் கடைசில காக்கா முட்டை கதையாகிடுச்சே!

ஸ்டார் ஹோட்டலில் சமரசம்... சூர்யா விவகாரம் கடைசில காக்கா முட்டை கதையாகிடுச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுரோட்டில் தன்னை அடித்துவிட்டதாக நடிகர் சூர்யா மீது இளைஞர் போலீசில் புகார் கொடுத்துவிட்டு, 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றார் அல்லவா... அவர் திரும்பப் பெற்றதன் பின்னணி இப்போது தெரிய வந்துள்ளது.

தான் யாரையும் அடிக்கவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்தாலும், தொடர்ந்து சூர்யா அடித்ததாகவும், அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அந்த இளைஞர் (பிரேம் குமார்) தொடர்ந்து கூறி வந்தார். இதில் லோக்கல் பிரமுகர்கள் தலையீடு அதிகரித்ததால் போலீசாரும் புகார் மனுவை ஏற்று ரசீது கொடுத்திருந்தனர்.


Kakka Muttai story repeats in Surya issue

சூர்யா நேரில் வர வேண்டும். அவர் வரும் வரை விடமாட்டேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார் பிரேம் குமார்.


இந்த நிலையில்தான் திடீரென நேற்று மாலை புகாரை வாபஸ் பெறுவதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார். இதன் பின்னணியில் ஒரு சமரசப் பேச்சு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இளைஞர் பிரேம் குமாரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்த சூர்யாவின் தந்தை சிவகுமார், வக்கீல் முன்னிலையில் சமரசப் பேச்சு நடத்தினாராம். அதன் பிறகே பிரேம்குமார் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.


கடைசியில் காக்கா முட்டை கதையாகிடுச்சே!

English summary
In a sudden twist the youth assaulted by Surya in a road accident has withdrawn his complaint due to some compromise efforts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil