»   »  கலிஃபோர்னியாவில் 'கக்கூஸ்'!

கலிஃபோர்னியாவில் 'கக்கூஸ்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மில்பிடஸ்(யு.எஸ்): சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கக்கூஸ் ஆவணப் படம் திரையிடப்பட உள்ளது. வரும் சனிக்கிழமை, ஆகஸ்ட் 13ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, மில்பிடஸ் நூலக அரங்கத்தில் திரையிடப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் இன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல குழுக்கள், விதவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

Kakkoos screening in California

தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக வாரம்தோறும் ஏதாவது ஒரு ஊரில், நிதி திரட்டுதல், நீர் நிலைகள் மேம்படுத்துதல் என ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது.

சமூக நீதியை வலியுறுத்தும் வகையிலும் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெரியாரின் சிந்தனைகள் பற்றி இளையவர்களிடம் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரியார் பற்றிய புத்தகங்கள், இணையதள வெளியிடுகள் பரவலாக வாசிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கக்கூஸ் திரைப்படத்தை பார்வையாளர்களுக்கு இலவசமாக திரையிடும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

மிகச் சமீபத்தில்தான் கக்கூஸ் திரைப்பட இயக்குனர் திவ்யா, பழைய வழக்குக்காக கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். என்ன தான் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா என்றாலும், இன்னும் மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளும் அவலத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது கக்கூஸ்.

அம்பேத்கர் அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா, அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கிள், அசோசியஷன் ஃபார் இண்டியா டெவலப்மெண்ட், பே ஏரியா, நாம் தமிழர் அமெரிக்கா அறக்கட்டளை, சிறகு ஆன்லைன் மேகசின் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகியவை இணைந்து கக்கூஸ் பட திரையிடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

English summary
Kakkoos documentary movie will be screened in California on August 13.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil