»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil


பிரபல சினிமா நடன இயக்குநர் கலா- கோவிந்தன் தம்பதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துவழங்கியுள்ளது.

நடன இயக்குநர் கலா ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்தவர். இயக்குநர் பாலசந்தரின் ஆஸ்தான நடனஇயக்குநராக பல படங்களில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள்நடத்தச் செல்லும் நடிகர்கள் முதலில் நாடுவது இவரைத்தான். சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன் உள்ளிட்டஇடங்களில் நடிகர் சங்கம் நடத்திய கலை நிகழச்சிகள் வெற்றியடைந்ததற்கு இவரும், இவரதுநடன குழுவும்முக்கிய காரணம்.

இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகை ஸ்னேகாவின் சகோதரர் கோவிந்தனைத் திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் சுமூகமாக போய்க் கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வில் பின்பு பிரச்சனைகள்தோன்றியது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து, விவாகரத்து மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல நீதிமன்ற நீதிபதி ராஜசூரியா, இருவருக்கும் விவகாரத்து வழங்கிஉத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil