»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகில் இது கணவரைப் பிரியும் காலம் போலிருக்கிறது.

டான்ஸ் மாஸ்டர் கலா தனது கணவரைப் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கணவரைப் பிரியும்மனைவி, மனைவியைப் பிரியும் கணவர் என தமிழ் திரையுலகில் மணமுறிவுகள் சகஜமாகி வருகின்றன.

கமல்-சரிகா, பார்த்திபன்-சீதா, ரகுவரன்-ரோகினி, ரேவதி-சுரேஷ்மேனன் வரிசையில் இப்போது டான்ஸ் மாஸ்டர்கலாவும் இணைந்துவிட்டதாகப் பேசப்படுகிறது.

துபாயில் வசித்து வரும் சாப்ட்வேர் என்ஜினியரான கோவிந்த் என்பவரை சில காலத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டார் கலா. திருமணத்துக்குப் பின் கலாவும் கணவருடன் சில காலம் துபாயில் வசித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக அவர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதனால் சென்னையில் தான் பெரும்பாலும் வாசம். கணவர் இருப்பதோ துபாயில். இதனால் இருவருக்கும்இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றிவிட்டதாகத் தெரிகிறது.

தற்போது கோலிவுட்டில் மிக பிஸியான டான்ஸ் மாஸ்டராக இருப்பது கலா தான்.
கலா மீண்டும் சினிமாவில் நுழைவதற்கு கணவர் கோவிந்த் எதிர்ப்பு தெரிவித்தாகவும் ஆனால் அதையும் மீறியே,கலா சென்னை வந்து சினிமாவில் மீண்டும் பிஸியானதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே மோதல் அதிகமாகி இப்போது கோவிந்தைவிட்டு கலா நிரந்தரமாகப்பிரிந்துவிட்டதாகவும் தெரிகிறது.

Please Wait while comments are loading...