»   »  கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் முக்கிய தடயங்களைக் கைப்பற்றிய போலீஸ்

கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் முக்கிய தடயங்களைக் கைப்பற்றிய போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பாக அவரது பண்ணை வீட்டில், கேரள போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

கல்லீரல் பிரச்சினை காரணமாக பிரபல தென்னிந்திய நடிகர் கலாபவன் மணி கடந்த 6 ம் தேதி, கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மணியின் மனைவி நிம்மி மற்றும் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் மணியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால் மீண்டும் இந்த வழக்கை, கேரள போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

கலாபவன் மணி

கலாபவன் மணி

மணியின் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்த்ததில் 'குளோர்பைரிபோஸ்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நண்பர்கள், உறவினர்கள்

நண்பர்கள், உறவினர்கள்

மணியின் மரணத்தில் அவரது நண்பர்கள், உறவினர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அவரது மனைவி மற்றும் சகோதரர் சந்தேகப்படுகின்றனர். இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று ஆரம்பம் முதலே சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் கொள்வது குறிப்பிடத்தக்கது.

சாலக்குடி

சாலக்குடி

அபாயக் கட்டத்தில் இருந்த கலாபவன் மணி அவரது சாலக்குடி பண்ணை வீட்டில் இருந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அந்தப் பண்ணை வீட்டை போலீசார் பூட்டி சீல் வைத்திருந்தனர்.இந்த நிலையில் பண்ணை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கிருந்து முக்கியமான சில ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மணியின் உடலில்

மணியின் உடலில்

மணியின் உடலில் கண்டறியப்பட்ட ‘குளோர்பைரிபோஸ்' என்னும் ரசாயனத்துடன் இது ஒத்துப் போகிறதா? என்பதைக் கண்டறிய போலீஸ் அதனை பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

உதவியாளர்கள்

உதவியாளர்கள்

போலீஸ் காவலில் இருக்கும் மணியின் உதவியாளர்கள் நால்வரும், இதுவரை எந்த ஒரு கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லையாம். அவர்கள் வாய் திறந்தால் பல உண்மைகள் தெரியவரும் என்பதால் அவர்களிடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

போலீஸ் காவலில் இருக்கும் மணியின் உதவியாளர்கள் நால்வரும், இதுவரை எந்த ஒரு கூடுதல் தகவலையும் கொடுக்கவில்லையாம். அவர்கள் வாய் திறந்தால் பல உண்மைகள் தெரியவரும் என்பதால் அவர்களிடம் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

கேரள அரசு

கேரள அரசு

இதற்கிடையில் மணியின் குடும்பத்தினர் விரும்பினால் அவரது மரணம் குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட, அரசு தயாராக இருக்கிறது என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.

மணியின் மரணத்தை விட அதுகுறித்த சர்ச்சைகள் மலையாளக் கரையில் தற்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Inspection organs of the Kalabhavan Mani's body to be seen at the 'Chlorpyrifos' the pesticide was found. The Kerala Police Suspected that he died by Poison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil