»   »  'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்

'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான கலாபவன் மணி நேற்றிரவு கல்லீரல் பிரச்சினை காரணமாக மரணமடைந்தார்.

அக்மார்க் மலையாள நடிகர் என்றாலும் தமிழிலும் தன் பாணியில் அசத்தியவர் மணி. இவரின் காமெடி கலந்த வில்லத்தனம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று.

மறுமலர்ச்சி தொடங்கி பாபநாசம் வரை கலாபவன் மணியின் மறக்க முடியாத படங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

மறுமலர்ச்சி வேலு

மறுமலர்ச்சி வேலு

மறுமலர்ச்சி படம் தான் கலாபவன் மணியின் முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் சக மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.1998 ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியான மறுமலர்ச்சி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை வென்ற இப்படத்தில் வேலு என்னும் டிரைவராக மணி நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் மணியின் பேச்சால் ஊருக்குள் மிகப்பெரிய கலவரம் உண்டாகும். அதனால் மம்முடியிடம் இருந்து தப்பிக்க பெண் வேடமெல்லாம் போட்டு நடிப்பில் அசத்தியிருப்பார்.

ஜெமினி

ஜெமினி

4 வருட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் மணி மீண்டும் நடித்த படம் ஜெமினி. இப்படத்தில் தேஜா என்னும் வடசென்னை ரவுடியாக நடிப்பில் கலக்கியிருப்பார். ஜெமினி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு மணியும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள், 50 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் விருதை கைப்பற்றினார்.

குத்து

குத்து

2004 ம் ஆண்டு சிம்பு, ரம்யா நடிப்பில் வெளியான குத்து படத்தில் வில்லத்தனம் கலந்த அப்பாவாக மணி நடித்திருந்தார். படம் முழுவதும் நகைச்சுவை கலந்து இவர் காட்டிய வில்லத்தனம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குத்துவை சூப்பர் ஹிட்டாக மாற்றியதில் கலாபவன் மணிக்கும் ஒரு பெரிய பங்குண்டு. இதேபோல ஜெயம் ரவியின் மழை படத்திலும் வில்லத்தனம் கலந்த அப்பாவாக இவர் கலாபவன் மணி நடித்திருந்தார்.

ஆறு, வேல்

ஆறு, வேல்

சூர்யாவின் நடிப்பில் முக்கியப் படங்களான ஆறு, வேல் போன்ற 2 படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. குறிப்பாக ஆறு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் அசத்தியிருப்பார்.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று போற்றப்படும் ரஜினி, கமல் இருவரின் படங்களிலும் மணி நடித்திருக்கிறார். எந்திரன் படத்தில் மணி செய்தது சிறிய பாத்திரம் என்றாலும் கூட, இவரின் நடிப்பைப் பார்த்து கலாபவன் மணி மிகப்பெரிய நடிகன் என்று ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதேபோல பாபாநாசம் படத்தில் கமலை கொலை வழக்கில் மாட்டிவிடத் துடிக்கும் கான்ஸ்டபிள் பெருமாளாக நடித்திருப்பார். கமலின் பாபநாசம் தான் கலாபவன் மணியின் கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kalabhavan Mani's some Memorable Tamil Movies List Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil