»   »  என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு: கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி

என் தம்பி சாவில் திலீப்புக்கு தொடர்பு: கலாபவன் மணியின் அண்ணன் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று அவரின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கலாபவன் மணியின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கு மாநில போலீசாரிடம் இருந்து சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்த தெளிவும் ஏற்படவில்லை.

திலீப்

திலீப்

கலாபவன் மணியின் அண்ணன் ராமகிருஷ்ணன் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.

நிலம்

நிலம்

மணிக்கும், திலீப்புக்கும் இடையே நில விவகாரம் தொடர்பான டீலிங் இருந்தது. என் சகோதரரின் மரணத்திற்கு பின்னால் யார் உள்ளார்கள் என்று தெரியவில்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.

சிபிஐ

சிபிஐ

திலீப்புடனான நில டீலிங் குறித்து நான் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். மணி மரணம் குறித்த விசாரணைக்கு திலீப் ஒத்துழைக்கவே இல்லை. நல்ல நண்பராக இருந்தும் மணி இறந்த பிறகு ஒரேயொரு முறை தான் திலீப் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீதி

நீதி

மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருந்தால் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்கிறார் ராமகிருஷ்ணன். கலாபவன் மணியின் மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு உள்ளது என்று இயக்குனர் பைஜுவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kalabhavan Mani's brother Ramakrishnan said that he suspects Dileep's involvement in his brother's mysterious death.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil