»   »  மறக்க முடியுமா அந்த 'ஜெமினி' தேஜாவை?.. வருந்தும் ரசிகர்கள்

மறக்க முடியுமா அந்த 'ஜெமினி' தேஜாவை?.. வருந்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் கலாபவன் மணி நேற்று மாலை இறந்து போனது, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்பாக மலையாளத் திரையுலகில் இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காமெடி கலந்த வில்லத்தனம் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் மணி.

நேற்று மாலை கலாபவன் மணி இறந்த செய்தி கேட்டதும் துக்கத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் #KalabhavanMani என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டனர்.

தேசியளவில் ட்ரெண்டான அந்த ஹெஷ்டேக்கில் இருந்து ரசிகர்களின் ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.

வில்லன்

எவ்வளவோ மிகச்சிறந்த நடிப்பை மணி கொடுத்திருந்தாலும், ஜெமினி படத்தில் அவர் காட்டிய வில்லத்தனத்தை மறக்க முடியாது என்று பதிவிட்டிருக்கிறார் ஷரீப்.

எந்திரன்

எந்திரன் படத்தில் மணி நடித்தபோது 'கலாபவன் மணி ஒரு மிகப்பெரிய நடிகன்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதை நினைவூட்டியிருக்கிறார் தல அஜீத்.

ஜெமினி

மணி வில்லனாக நடித்திருந்த ஜெமினி படம் எல்லோருக்கும் பிடித்தமான படம் என்று கூறியிருக்கிறார் விக்ரம் கிருஷ்ணா.

தென்னிந்தியாவின்

தென்னிந்தியாவின் ஒரு மிகச்சிறந்த கலைஞனை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தியிருக்கிறார் பிரவீன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும், கலாபவன் மணி பற்றிய தங்களது எண்ணங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்வது குறிப்பிடத்தக்கது.

English summary
South Indian Actor Kalabhavan Mani Yesterday Passed Away.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil