»   »  ராஜா மந்திரியாக கலை அரசனும் காளி வெங்கட்டும்!

ராஜா மந்திரியாக கலை அரசனும் காளி வெங்கட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களான கலை அரசனும் காளி வெங்கட்டும் ஒரு படத்தில் நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்துக்குப் பெயர் ராஜா மந்திரி.

இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் உஷா கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறாார். படம் குறித்து அவர் கூறுகையில், "ஒவ்வொரு சாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே ராஜா மந்திரி படம். இது ஒரு சுத்தமான கிராம படம். கிராமத்தில் வாழும் ஒரு குடும்பம் அவர்களைச் சுற்றி இருக்கும் சூழல் என படம் முழுக்க குடும்ப பின்னைணியில் உருவாக்கியிருக்கிறோம்.

Kalai Arasan and Kali Venkat as Raja Manthiri

 
ராஜா மந்திரி படத்தில் தேவையான நகைச்சுவை, காதல், சண்டை, சந்தோசம் என அனைத்தையும் கலந்து தந்திருக்கிறோம்.

படத்தின் நாயகன் மெட்ராஸ் புகழ் கலையரசன். நல்ல நடிகர் எனும் அங்கீகாரத்துடன் டார்லிங் 2, கபாலி என முக்கியமான் படங்களை எதிர் நோக்கி வரும் இவருக்கு 'ராஜா மந்திரி' ஒரு மைல் கல் படமாக இருக்கும். காளி வெங்கட் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். இவரது பாத்திரம் நமது வாழ்வில் நாம் சந்திக்கும் அன்றாட ஒரு மனிதனின் கதாப் பாத்திரமாக இருக்கும்.

பால சரவணன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு முக்கிய நகைச்சுவை வேடத்தில் வருகிறார்," என்றார்.

Kalai Arasan and Kali Venkat as Raja Manthiri

20 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவே அவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பி ஜி முத்தையா படம் பிடிக்க வி மதியழகன் தயாரிக்க படம் வெகுவாக வளர்ந்து வருகிறது.

இந்த படத்தை மதியழகன் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஆரா சினிமாஸ் இந்தப் படத்தையும் வெளியிடுகிறது.

English summary
Raja Manthiri is a realistic movie directed by Usha Krishnan, a former associate of Suseenthiran, who had worked in films like Pandiya Naadu and Jeeva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil