இப்படி ஒரு வில்லனை பார்த்திருக்கவே மாட்டீங்க...யாரை சொல்றார் தாணு ?
சென்னை : ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்துள்ளது கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ். தற்போது தனுஷின் நானே வருவேன், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படங்களை தயாரித்து வருகிறார் தாணு.
இதற்கு முன் தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களையும் தாணு தான் தயாரித்திருந்தார். தற்போது இவர் தயாரித்துள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி உள்ளது.
டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன்-தனுஷ் இணைந்துள்ள படம் இது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஹீரோவும் நானே; வில்லனும் நானே
நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடத்துள்ளார். ஹீரோ, வில்லன் இரண்டுமே இவர் தான். இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தனுஷ் வில்வித்தை பயிற்சியும் எடுத்துக் கொண்டார்.

நானே வருவேன் படம் பார்த்துட்டீங்களா
இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான தாணுவிற்கு நானே வருவேன் படத்தை பிரத்யேகமாக போட்டுக் காட்டி உள்ளனர். நானே வருவேன் படம் பற்றி தாணு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது நானே வருவேன் படம் பற்றிய ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.

நிச்சயம் விருது கிடைக்கும்
தாணு தனது பேட்டியில், நானே வருவேன் கதையை செல்வராகவன் சொன்ன போது, அது கடைசி வரை தனுஷிற்கான கதை என எனக்கு தெரியாது. கதை கேட்டு அசந்துட்டேன்.படத்தின் க்ளைமாக்சை அப்படியே சேரோட ஒட்டி பார்த்தேன். படத்தை பார்த்து விட்டு, தனுஷிற்கு கால் பண்ணி பேசினேன். தம்பி அசத்திட்டீங்க. உங்க நடிப்பிற்கு படம் நிச்சயம் ஹிட். விருதும் உறுதியாக கிடைக்கும் என்றேன்.
Recommended Video

இப்படி பார்த்திருக்கவே மாட்டீங்க
வில்லன், ஹீரோ என இரு ரோல்களில் நடித்து அசத்தி உள்ளார். மிக அற்புதமான நடிப்பு.இப்படி ஒரு வில்லனை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க. இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது. இதை அடிப்படையாக வைத்து பல படங்கள் வரலாம். பயங்கரமான பர்ஃபாமன்ஸ். அள்ளிடும். தொட்டது துலங்கும். பட்டது மிளிரும்.

ஃபேன்ஸ் ரியாக்ஷன் எப்படி இருக்கும்
இந்த படத்தை எத்தனை முறை பார்ப்பார்கள் என்றே தெரியாது. தனுஷ் ரசிகர்கள் சேர் மீது ஏறி குதிப்பார்கள். தனுஷ் ரசிகராக இல்லாதவர்கள் இனி ரசிகராவார்கள். பல புதிய ரசிகர்கள் வருவார்கள். இந்த படம் யார் பண்ணுகிறார்கள் என கதை கேட்கும் போதே எனக்கு ஆர்வமாக இருந்தது. இவர் தான் பண்ணுகிறார் என்றதுமே எனக்கு பயங்கர திருப்தி, சந்தோஷமாக இருந்தது.

செல்வராகவனை புக் செய்த தாணு
அப்படி ஒரு நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி உள்ளார்.இந்த படத்திற்கு பிறகு தனுஷை தேடி நிறைய டைரக்டர்கள் வருவார்கள். நிறைய வித்தியாசமான ரோல்கள் வரும். நிறைய தயாரிப்பாளர்கள் செல்வராகவனை நோக்கி செல்வார்கள். அதனால் தான் எனக்காக இன்னொரு படம் பண்ணிக் கொடுக்கனும்னு இப்பவே அவரை புக் செய்து விட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











