»   »  ஞானவேல் ராஜா, பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிய கலைப்புலி!

ஞானவேல் ராஜா, பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிய கலைப்புலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் களமிறங்கி, தயாரிப்பாளர்களுக்கு எதிரான விமர்சனங்களை வைத்த ஞானவேல் ராஜா மற்றும் பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிவிட்டார் சங்கத்தின் இப்போதைய தலைவர் கலைப்புலி தாணு.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலைப்புலி தாணுவை தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார் பிரகாஷ் ராஜ், கலைப்புலி தாணுவுக்கு ஒன்றும் தெரியாது... அவருக்கு இன்றைய சினிமா தெரியாது என்றெல்லாம் கூறிய பிரகாஷ் ராஜ், அவரை தற்குறி என்று விமர்சித்திருந்தார்.

Kalaipuli Thaanu slammed Gnanavel Raja and Prakash Raj

அதற்கெல்லாம் பதலிலளிக்கும் விதமாக போட்டுத் தாக்கினார் தாணு.

பிரகாஷ் ராஜ் பற்றிக் கூறுகையில், "தயாரிப்பாளர்களைப் பற்றிப் பேசும் தகுதியே இல்லாதவர் பிரகாஷ்ராஜ். இவரால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஒரு லிஸ்டே போடலாம். தெலுங்கில் எத்தனை முறை இவருக்கு தடைப் போட்டிருக்கிறார்கள்? தமிழ் பேசிவிட்டால், தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை கண்டபடி பேச உரிமை வந்துவிடுமா? இவருக்கு பிரச்சினை என்று வந்தபோது அதைத் தீர்க்க முன்வந்தது இதே தயாரிப்பாளர் சங்கம்தான்," என்றார்.

கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக குற்றம் சாட்டிய ஞானவேல் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தாணு, "இந்த இரண்டு ஆண்டு நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து எப்போது நடந்தது என்று ஞானவேல் ராஜாவால் கூற முடியுமா? இவரால் சிவகுமார் குடும்பத்துக்கே அவமானம். சிங்கம் 3 படத்தை எத்தனை முறை தள்ளிப்போட்டு மற்ற தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்தார்?

கொம்பன் படத்தை வெளியிட முடியாமல் இதே ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அழுதாரே... அப்போது துணைநின்று பிரச்சினையைத் தீர்த்து படம் வெளியிட உதவியது இதே தயாரிப்பாளர் சங்கம்தானே... அது கட்டப்பஞ்சாயத்தா? அந்தப் படத்துக்காக அரசியல் தலைவர்களிடமெல்லாம் பேசி, சுமூகமாக படத்தை வெளியிட்டது இதே தயாரிப்பாளர்கள்தானே... இவர்களைப் பற்றிப் பேச ஞானவேல் ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது?," என்றார்.

English summary
In a protest against Nadigar Sangam, Kalaipuli Thaanu has blasted Gnanavel Raja and Prakash Raj for their comments on him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil