»   »  தெறி விநியோக உரிமை யாருக்கும் தரப்படவில்லை! - கலைப்புலி தாணு

தெறி விநியோக உரிமை யாருக்கும் தரப்படவில்லை! - கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெறி படத்தின் விநியோக உரிமை யாருக்கும் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக பரபரப்பாக செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன.


Kalaipuli Thanu clarifies on Theri distribution rights

இந்தத் தகவலை முதலில் பரப்பியது அய்ங்கரன் நிறுவனம்தான். ஆனால் பின்னர் இந்த செய்தியை வாபஸ் பெற்றுக் கொண்டது அய்ங்கரன்.


தொடர்ந்து, தெறி' படத்தின் விநியோக உரிமை குறித்த தகவலுக்கு வருந்துகிறோம். அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருங்கள், என்று ட்வீட் செய்திருந்தார்கள்.


Kalaipuli Thanu clarifies on Theri distribution rights

'தெறி' படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "விநியோக உரிமை குறித்து பலரும் பேசி வருவது உண்மைத்தான். ஆனால், நாங்கள் யாருக்கும் இன்னும் அதிகார்பூர்வமாக விநியோக உரிமையை வழங்கவில்லை. விரைவில் இதுபற்றி நாங்களே தெரிவிப்போம்," என்றார்.

English summary
Kalaipuli S Thaanu clarified that the releasing rights of Vijay starring Theri is still not given to any one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil