»   »  வைரமுத்துவின் மனதில் இருந்தது வந்து விட்டது.. கலைப்புலி தாணு

வைரமுத்துவின் மனதில் இருந்தது வந்து விட்டது.. கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைரமுத்துவின் மனதில் இருந்ததுதான் வாய் மூலமாக வந்துள்ளது. அவர் என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். ஆனால் பதிலுக்கு நாங்கள் விமர்சிக்கத் தயாராக இல்லை என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், கபாலி பட தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

Kalaipuli Thanu comments on Vairamuthu

கபாலி படம் தோல்விப் படம் என்று கூறிய வைரமுத்துவின் பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். வாய் தவறி சொல்லி விட்டதாக வைரமுத்து விளக்கம் அளித்தாலும் கூட அவர் இப்படிப் பேசியிருக்கலாமா என்று ரசிகர்கள் அல்லாத மற்றவர்களும் கூட முகம் சுளித்துள்ளனர்.

இந்த நிலையில் வைரமுத்துவின் பேச்சு குறித்து தாணுவிடம் கருத்து கேட்டனர். அதற்கு தாணு கூறுகையில், அகத்தில் இருந்தது புறத்தில் தெரிந்தது. அவருடைய மனது என்ன நினைத்ததோ அதுதான் வாய் வழியாக வந்துள்ளதாக நான் கருதுகிறேன். அவர் விமர்சிக்கலாம், அவரை நாங்கள் விமர்சிக்க தயாராக இல்லை என்று கூறினார் தாணு.

English summary
Kabali movie producer Kalaipuli Thanu has refuted to comment on lyricst Kalaipuli Thanu for his comment on Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil