»   »  நையப்புடை 'நாயகனுக்கு' வந்த நப்பாசை.. அலறியடித்து 'வெட்டி எறிந்த' தாணு!

நையப்புடை 'நாயகனுக்கு' வந்த நப்பாசை.. அலறியடித்து 'வெட்டி எறிந்த' தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வயதாகி ஓய்வெடுக்க வேண்டிய காலத்திலும் அடங்காத எஸ்ஏ சந்திரசேகரன் ஒரு நையப்புடை என்று ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா...

இந்தப் படத்துக்காக ஒரு ட்ரைலரை சமீபத்தில் உருவாக்கியிருந்தனர் படக்குழுவினர்.


Kalaipuli Thanu dissatisfied SAC trailer

ஆனால் அது ட்ரைலர் அல்ல.. தனக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்பதை, பார்த்தபோதுதான் புரிந்து கொண்டாராம் தயாரிப்பாளர் தாணு.


காரணம், அந்த ட்ரைலரில் எஸ் ஏ சந்திரசேகரன், 'இனி அடுத்து தமிழன் ஆட்சிதான்.. ஒரு தமிழன்தான் தமிழ் நாட்டை ஆளப் போறான்.. அவன் வந்துகிட்டே இருக்கான்,' என்றெல்லாம் வசனம் பேசியிருந்தாராம்.


யாரை மனதில் வைத்து இப்படி ஒரு வசனம் பேசியிருக்கிறார் எஸ்ஏசி என்பது தாணுவுக்குத் தெரியாதா என்ன?


இயக்குநரைக் கூப்பிட்ட அவர், 'தம்பி.. படம் நல்லபடியா ரிலீசாகணுமா வேணாமா... அந்த வசனங்களையெல்லாம் வெட்டிடும்மா' என்று கூற... அப்படியே செய்துவிட்டாராம் புது டைரக்டர்!

English summary
Sources says that producer Thanu is unhappy with the trailer of SA Chandrasekaran starrer Nayyapudai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil