இவ்வளவு நேர்த்தியாக ஒரு படமா...! - மிக மிக அவரசத்தைப் பாராட்டிய கலைப்புலி தாணு #MigaMigaAvasaram

By Shankar

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம்.

Kalaipuli Thanu praises Miga Miga Avasaram

கதை, வசனம் - ஜெகன்நாத். ஒளிப்பதிவு - பாலபரணி, படத் தொகுப்பு - சுதர்சன். இசை - இஷான் தேவ். தயாரிப்பு, இயக்கம்- சி

பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதேநேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம்.

Kalaipuli Thanu praises Miga Miga Avasaram

இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல 'டாக்' உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

Kalaipuli Thanu praises Miga Miga Avasaram

படம் பார்த்து முடித்ததும் இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டினார் கலைப்புலி தாணு.

Kalaipuli Thanu praises Miga Miga Avasaram

தான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத புதுமைப் படைப்பு இது. இவ்வளவு நேர்த்தியான படமாக வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கவே இல்லை. மிகவும் பெருமைக்குரிய படம் என்று கலைப்புலி தாணு தெரிவித்தார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பாக தம்பி சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிக மிக அவசரம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.

கலைப்புலி தாணுவின் பாராட்டு குறித்து இயக்குநர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், "இப்போதுதான் படம் முடிந்தது. இதுவரை யாருக்கும் படத்தைப் போட்டுக் காட்டவில்லை. அண்ணன் கலைப்புலி தாணுவுக்காக முதன் முதலில் நேற்று திரையிட்டுக் காட்டினேன். படம் பார்த்து நெகிழ்ந்துபோய் பாராட்டினார். அவராகவே ட்விட்டரில் படம் குறித்து தன் கருத்தையும் தெரிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் எனக்கு முன்னோடி அண்ணன் கலைப்புலி தாணுதான். அவரது பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளது," என்றார்.

Miga Miga Avasaram Official Teaser

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X