»   »  ரோஜா மாதிரி பிரமாதமான படம் வாகா! - கலைப்புலி தாணு பாராட்டு

ரோஜா மாதிரி பிரமாதமான படம் வாகா! - கலைப்புலி தாணு பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாகா படம் மணிரத்னம் இயக்கிய ரோஜா மாதிரி பிரமாதமாக வந்துள்ளது என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

ஜிஎன் குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ரன்யா நடித்துள்ள படம் வாகா. இன்று அந்தப் படம் திரைக்கு வந்துள்ளது.


Kalaipuli Thanu praises Wagah

படத்தை விஜயபார்கவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ளார்.


படத்தை சிறப்புக் காட்சியில் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.


Kalaipuli Thanu praises Wagah

"இந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு மணிரத்னத்தின் ரோஜா நினைவுக்கு வந்தது. அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான படம் வாகா. இந்த மாதிரி படங்கள் ஜெயிக்க வேண்டும். தம்பி விக்ரம் பிரபு உள்பட அனைத்துக் கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். பெரிய அளவுக்கு செலவு செய்து படத்தை உருவாக்கியிருக்கும் தம்பி குமரவேலனுக்கு வாழ்த்துகள்," என்றார்.

English summary
Producer Kalaipuli Thanu has praised Wagah movie crew after watched the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil