»   »  'திருட்டு வீடியோவைப் பார்க்காதீங்க.. ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள்!'

'திருட்டு வீடியோவைப் பார்க்காதீங்க.. ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பற்றி திருட்டு வீடியோவாக எந்தக் காட்சி வந்தாலும் உடனே அதைப் பார்த்து பகிர்வதைத் தவிருங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேட்டுக் கொண்டுள்ளார்.

கபாலி படத்தின் ஒரு நிமிட திருட்டு வீடியோ நேற்று இரவு வெளியாகியுள்ளது. ரஜினிக்கு நேற்று போடப்பட்ட சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் இந்த கேவலமான காரியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.

Kalaipuli Thanu's request to Rajini fans

அதே நேரம் படத்தின் வேறு காட்சிகள் எதுவும் வெளியாகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கலைப்புலி தாணு.

இந்த திருட்டு வீடியோ குறித்து தாணு கூறுகையில், "கபாலி படம் திருட்டு வீடியோவாக வராமல் தடுக்க வேண்டிய ஏற்பாடுகளை டெல்லி வரை சென்று செய்துவிட்டோம். மத்திய அரசு திருட்டு வீடியோவைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினி சாருக்கு போடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது ஒரு நிமிடக் காட்சியை பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அந்த நபரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்.

ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள்... என்னதான் திருட்டு வீடியோ வெளியானாலும், ரஜினி படத்தை, அவரது அறிமுகக் காட்சியை தியேட்டரில் காணும் அனுபவம் கிடைக்குமா? எனவே இதுபோன்ற வீடியோக்கள் எதையும பார்க்காதீர்கள், சமூக வலைத் தளங்களில் பகிராதீர்கள். நாளை திரையில் பார்த்து ரசியுங்கள்," என்றார்.

English summary
Kalaipuli Thanu, producer of Kabali requested fans not to watch or share the pirated video of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil