twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓவினாம் தற்காப்புக் கலையை மையமாக வைத்து எடுக்கப்படும் கலைவேந்தன்

    By Shankar
    |

    ஓவினாம் என்ற தற்காப்புக் கலையை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு கலை வேந்தன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

    அஜய் - சனம் ஷெட்டி இந்தப் படத்தில் நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார். அம்புலி படத்தில் நடித்தவர் இந்த சனம் ஷெட்டி.

    எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கிறார்.

    முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், யுவராணி, சாதனா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான்.

    ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

    சினிமா பாணியில் இல்லாமல் பொதுவான பெயரான கலைவேந்தன் என்று தலைப்பிட்டது ஏன் என்று இயக்குநர் பரசுராமிடம் கேட்டபோது, "ஓவினாம் என்ற தற்காப்புக் கலையைப் பற்றிச் சொல்வதால், அந்தக் கலையில் மாஸ்டராக உள்ள நாயகனை மையப்படுத்தி இந்த தலைப்பு வைத்தோம்," என்றார்.

    படத்தின் கதை?

    படத்தின் கதை?

    ஓவினாம் மாஸ்டராக இருக்கும் நாயகன் ஒரு சிறிய பிரச்னையில் நாயகியைச் சந்திக்க மோதல் காதலாகிறது. இவர்களின் காதலுக்கு நாயகியின் பெற்றோர் மூலம் எதிர்ப்பு வருகிறது.

    நாயகி அவுட்

    நாயகி அவுட்

    இதற்கிடையே தொழில் விஷயத்தில் உள்ளூர் ரவுடி ஒருவனிடம் நாயகன், நாயகி இருவரும் பகையாகிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு மர்ம கும்பலால் நாயகி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட, கொலைப்பழி நாயகன் மீது விழுகிறது. இந்த பிரச்னையில் இருந்து நாயகன் மீண்டாரா, உண்மை கொலையாளி யார் என்ற கோணத்தில் கதை சஸ்பென்ஸ் திரில்லர், காமெடி மற்றும் பரபரப்பான சண்டை காட்சிகளோடு விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லப்பட்டிருகிறது," என்றார்.

    நிஜ செட்

    நிஜ செட்

    மேலும் அவர் கூறுகையில், " இந்த படத்தில் ஓவினாம் என்ற தற்காப்பு கலை இடம் பெறுவதால் அதற்காக பெரிய பயிற்சி பள்ளி ஒன்று தேவை பட்டது. அதற்கு பல இடங்களில் தேடியும் சரியான இடம் அமையாததால் நாங்களே அதற்காக சுமார் ஏழு லட்சங்கள் செலவு செய்து பிரமாண்டமாக மிகப்பெரிய செட் அமைத்து அதில் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தினோம்.

    குவிந்த மக்கள்

    குவிந்த மக்கள்

    அதைப் பார்த்து நிஜ பயிற்சி பள்ளி என்று நினைத்து அருகில் உள்ள மக்கள் கூட்டம் கூடியது. அதனால் நங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பட பிடிப்பை நடத்தி முடித்தோம். இந்த பயிற்சி பள்ளி செட்டை பார்த்து ஆரம்பத்தில் நிஜம் என்று நினைத்து அதில் நடித்த நடிகர், நடிகைகளே ஆச்சர்யப்பட்டார்கள்," என்றார் பரசுராம்.

    English summary
    Kalaivendan is a new movie directed by debutant Parasuram based on a self defence art called Vovinam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X