»   »  ஐ லவ்யூ பொண்டாட்டி... பேஸ்புக்கில் பாசத்தைப் பொழிந்த "அன்பு"!

ஐ லவ்யூ பொண்டாட்டி... பேஸ்புக்கில் பாசத்தைப் பொழிந்த "அன்பு"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மனைவி புண்ணியத்தால் தானும் நடிகர் தனுஷ் போல் ஆகப் போவதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் கலையரசன்.

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது அன்புக்கும் பாத்திரமானவர் நடிகர் கலையரசன். தற்போது பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் உறுமீன் படத்தில் கலக்கல் வில்லனாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கலையரசன். இந்த பிறந்தநாளில் அவரது நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறியுள்ளதாம். அதுவும் அவர் மனைவி மூலமாக.

நீண்டநாள் ஆசை...

நீண்டநாள் ஆசை...

அதாவது, சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாகவே உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வதற்கு சைக்கிளிங் தான் நல்ல சாய்ஸ் என்பது கலையின் கருத்தாம். இதற்காக காஸ்ட்லியான சைக்கிள் ஒன்றை வாங்க வேண்டும் என பல ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தாராம்.

மனைவியின் பர்த்டே பரிசு...

மனைவியின் பர்த்டே பரிசு...

ஆனால், பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லையாம். இந்நிலையில், இந்த பிறந்தநாள் அன்று காலையில் அவரது மனைவி பிரியா காஸ்ட்லி சைக்கிள் ஒன்றை வாங்கிப் பரிசளித்து, கலையரசனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து விட்டாராம்.

கேனான் டேல் சைக்கிள்...

கேனான் டேல் சைக்கிள்...

ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள ‘கேனான் டேல்' என்னும் அந்த சைக்கிளுடன் புகைப்படம் எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கலையரசன். மேலும், இனி அந்த சைக்கிளிலில் தான் இண்டோர் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் கலை.

ஐ லவ் யூ பொண்டாட்டி...

ஐ லவ் யூ பொண்டாட்டி...

தீவிரமாக வொர்க் அவுட் செய்து விஜய், தனுஷ் மாதிரி சிலிம் ஆக வேண்டும் என்பது தான் கலையரசனின் ஆசையாம். தற்போது தன் மனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகிவிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஐ லவ்யூ பொண்டாட்டி' என பேஸ்புக் பக்கத்திலேயே தன் ‘அன்பை'ப் பொழிந்துள்ளார் கலை.

English summary
The Madras film fame actor kalaiyarasan has thanked his wife for gifting a bicycle.
Please Wait while comments are loading...