»   »  கலகலப்பு 2... தியேட்டர்களில் சிரிப்பு மழை! #Kalakalappu2

கலகலப்பு 2... தியேட்டர்களில் சிரிப்பு மழை! #Kalakalappu2

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 2: சினிமா விமர்சனம்

சுந்தர் சி படம் என்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. கதை எப்படி இருந்தாலும் காட்சிகளை அமைக்கும் விதத்தில் சுந்தர் சி ஸ்பெஷலிஸ்ட்.

கலகலப்பு 2 படத்துக்கு வரும் விமர்சனங்கள், கமெண்டுகளைப் பார்க்கும்போது, இந்த முறையும் சுந்தர் சி ஏமாற்றவில்லை என்பது புரிந்திருக்கும்.

Kalakalappu 2 gets good response

கலகலப்பு 2 படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை கையாள்வதே தனி கலைதான். அது சுந்தர் சிக்கு அநாயாசமாகக் கைவந்திருக்கிறது.

திரையில் நிமிஷத்துக்கொரு முறை மக்கள் சிரித்து மகிழ்வதைப் பார்க்க முடிகிறது என சமூக வலைத் தளங்களில் இந்தப் படத்துக்கு விமர்சனம் வந்துள்ளது.

சிலர் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், முதல் காட்சியிலிருந்தே படம் குறித்து சாதகமான கருத்துகள் வந்தவண்ணம் இருப்பதால், அடுத்தடுத்த காட்சிகளுக்கான முன்பதிவு அமோகமாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் அதிகபட்ச வசூல் கேரண்டி உள்ள படம் கலகலப்பு 2தான் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

English summary
Sundar C's Kalakalappu 2 gets good responce from audience

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil