»   »  'கலகலப்பு 3' வருமா..? சுந்தர்.சி-யின் ஐடியா என்ன?

'கலகலப்பு 3' வருமா..? சுந்தர்.சி-யின் ஐடியா என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 3 மற்றும் 4 விரைவில்...

சென்னை : சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த படம் 'கலகலப்பு 2'. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

முதல் நாள் படத்திற்கு ஆவரேஜ் ஓப்பனிங் இருந்தாலும், அடுத்தடுத்த நாள் படத்தினை பார்க்க தியேட்டர்களுக்கு செம்ம கூட்டம் வந்துள்ளது.

இந்நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் தயாராகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.

கலகலப்பு 2 வசூல்

கலகலப்பு 2 வசூல்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'கலகலப்பு 2' திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ. 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ 13 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

விமல், சிவா, சந்தானம் நடித்த 'கலகலப்பு' படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 'கலகலப்பு 2' படத்தை இயக்கத் திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது.

படக்குழுவினர் மகிழ்ச்சி

படக்குழுவினர் மகிழ்ச்சி

கடந்தவாரம் வெளியான 'கலகலப்பு 2' படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் 'கலகலப்பு 2' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி.

அடுத்த பாகம் வரும்

அடுத்த பாகம் வரும்

அப்போது அவர் பேசும்போது, இந்தப் படத்தின் மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று கலகலப்புகள் தொடரும் என்று கூறினார். 'கலகலப்பு 2' படம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் விரைவில் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.

English summary
'Kalakalappu 2' directed by Sundar C has been well received by fans. In this scenario, the third part of the film will be ready soon. 'Kalakalappu 2' movie is commercially successful and SundarC has decided to take the next part soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil