»   »  கபாலியின் நெருப்புடா... நெருங்குடா... கல்பனா அக்கா கொன்ற 15 பாடல்கள்...

கபாலியின் நெருப்புடா... நெருங்குடா... கல்பனா அக்கா கொன்ற 15 பாடல்கள்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வயதானவர்கள்... இதயம் பலஹீனமானவர்கள்... கர்ப்பிணிகள்... நோயாளிகள் யாரும் இதை பார்க்கவோ கேட்கவோ வேண்டாம் என்று முன் அறிவிப்பு போடுவார்கள். ஆனால் கல்பனா அக்கா பாடும் பாடல்கள் எந்த முன்னறிவுப்பும் இன்றி வெளியாகி லட்சக்கணக்கில் ஹிட் அடிக்கிறது. முகநூல் பக்கத்தில் ரசிகர்கள் கல்பனா அக்காவின் பாடல்களை பதிவேற்றி வருகின்றனர். இப்பேது கல்பான அக்கா கொன்ற 15 பாடல்கள் தற்போது யுடுயூப்பில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல பாடல்களை தன் கான குரலில் பாடி பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்வது தான் கல்பனா அக்காவின் வேலை. அந்தப் பாடல்களும் 2 லட்சம் வரை ஹிட் அடிக்கும் என்பது பல பிரபல பாடகர்களுக்கே அதிர்ச்சிதான் தான். இவை அனைத்தும் இவரைக் கலாய்க்கும் எண்ணத்தில் பார்த்தவர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை இன்ஸ்பிரேசனாக வைத்துதான் விஷாலின் கதகளி படத்தில் கிரேஸ் பாடும் செல்ஃபி பாடல்கள் சீன் வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு பிரபலமானவர் கல்பனா அக்கா. சமீபத்தில் கபாலி 'நெருப்புடா'பாடலை பாடி நடித்து ரஜினி ரசிகர்களை அட்ராக் செய்தார். சூப்பர்க்கா என பலர் பாராட்டவும், பலர் பயந்தோம் என பதிவிடவும் செய்து வருகிறார்கள். உண்மையில் யார் இந்த கல்பனா அக்கா என்பதை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

மெல்பேர்ன் கல்பனா அக்கா

மெல்பேர்ன் கல்பனா அக்கா

கல்பனா பேல்ஸ் பிறந்தது யாழ்பாணத்தில். மேற்படிப்பை இந்தியாவில் தான் பயின்றுள்ளார் கல்பனா. பிறகு ஆஸ்திரேலியா சென்ற இவர் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். இவரது முழுப்பெயர் கல்பனா பாலேஸ்வரன். பாலேஸ்வரன் என்பது இவரது கணவர் பெயராம்.

முதல் பாடல்...

கல்பனா பேல்ஸ் முறையாக சங்கீதம் கற்கவில்லை இவர் முதன்முதலில் பாடி பதிவு செய்த பாடல், சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற "நானொரு சிந்து காவடிச்சிந்து..." என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முகநூல் முகவரியில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த பதிவு, முகநூல் முழுதும் பரவி இவரை ஸ்டார் ஆக்கியது.

சிங்கப்பூர் கல்பனாடா...

சிங்கப்பூர் கல்பனாடா...

கபாலியின் நெருப்புடா தீம் பாடல் பல ரசிகர்களால் பாடப்பட்டு, பல நட்சத்திரங்களின் டப்மாஸ் வைரலாகி வந்த அந்த சமயத்தில் தான் அந்த பேரிடி தாக்கியது.
ரஜினி ரசிகர்கள் எரிமலையாய் வெடித்தனர், மற்றும் சிலர் வயிறு குலுங்க சிரிக்கவும், சிலர் அய்யோ, அம்மா என ஓடவும் செய்தனர். இதற்கு காரணமானவர் கல்பனா அக்கா. இந்த கல்பனா அக்காவைப் பற்றி அவரது ரசிகர் பேசியதை கேளுங்களேன்.

கானக்குயில் கல்பான அக்கா ரசிகர் மன்றம்

கானக்குயில் கல்பான அக்கா ரசிகர் மன்றம்

முதல் முறை பதிவு செய்த அந்த காணொளி 2.5 லட்சம் பேருக்கும் மேல் பார்வையிட்டுயிருந்தனர். மேலும், இப்படி ஒரு விஷயம் நடக்கும் என நான் எப்போதும் நினைத்தது இல்லை. அது ஓர் கனவு போல நிகழ்ந்தது. மேலும், என் பெயரில் ஃபேன் பேஜ் நிறைய இருக்கின்றன என பெருமைப் படுகிறார்.

அக்கா கொன்ற பாடல்கள்

முகநூலில் இவரது வினோதமான பாணியில் பாடி பதிவேற்றம் செய்யப்படும் பாடல்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிபாதியாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இது திட்டமிட்ட செயலல்ல. ஒருநாள், வேலை முடிந்து வீடு திரும்பிய போது, மிகவும் சோர்வாக உணர்ந்ததாகவும். சோர்வை போக்கிக்கொள்ள சாதாரணமாக பாடி பதிவு செய்த காணொளியை முகநூலில் பதிந்த போது அது வைரலாகி விட்டது என்றும் கல்பனா பேல்ஸ் கூறியுள்ளார்.

பாடல்கள் பாட காரணம் என்ன?

பாடல்கள் பாட காரணம் என்ன?

"நானொரு சிந்து.." பாடலுடன் நிறுத்திக் கொள்ள தான் நினைத்தேன். ஆனால், வெறுப்பவர்கள் கமெண்ட்ஸ் செய்வதால் தான் நான் மென்மேலும் பாடல்கள் பாட துவங்கினேன். மேலும், நான் எனது முகநூலில் மட்டும் தான் பகிர்கிறேன். அதை தானாக முன்வந்து லைக், ஷேர் செய்துவிட்டு அவர்களாக என்னை பாட வேண்டாம் என கூற எந்த உரிமையும் இல்லை. நான் பாடுவதை பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் ஷேர் அல்லது லைக் செய்ய அவசியமே இல்லையே? என்று கேட்கிறார் கல்பனா.

பாடகி சித்ரா

பாடகி சித்ரா

கல்பனா ஒருமுறை பாடகி சித்ராவை சந்தித்த போது, பலர் சிரிக்க உங்களுக்கே தெரியாமல் நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். இதை தொடருங்கள் என பாராட்டினார் என்றும் கல்பனா தெரிவித்துள்ளார். என்னால் 10 பேர் சிரிக்கிறார்கள் என்றால் சந்தோஷம் தான், சித்ரா அம்மாவே அதை தான் என்னிடம் கூறினார்கள். மேலும் மேலும் என்னைப் பார்த்து கலாய்ப்பவர்களாலும், சிரிப்பவர்களாலும் தான் இன்னும் இன்னும் உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்' என பன்ச் அடிக்கிறார் கல்பனா அக்கா.

தொடர்ந்து பாடுகிறேன்

"நான் பாடும் இந்த முறைக்கு என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்கள் இது மகிழ்ச்சியளிக்கிறது என ஊக்கவிக்கின்றனர். அதனால் தான் நான் தொடர்ந்து பாடி வருகிறேன்" என கல்பனா அக்கா கூறியுள்ளார். பாடுங்க அக்கா நாங்க கேட்கறோம் என்கின்றனர் ரசிகர்கள்.

English summary
Kalapana akka kabali's Neruppuda Nerunguda Songs and She killed 15 Songs Video Viral.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil