»   »  களவாணி தலைப்புக்காக மோதிக் கொள்ளும் இயக்குநர் தயாரிப்பாளர்!

களவாணி தலைப்புக்காக மோதிக் கொள்ளும் இயக்குநர் தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2010ம் ஆண்டு விமல் ஓவியா நடிப்பில் ஏ சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'களவாணி' திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சுரேஷ் இயக்கத்தில் விமல் நடித்த 'எத்தன்' படத்தைத் தயாரித்து வெளியிட்டது இந்த நிறுவனம்.

தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் 'வதம்' படத்தைத் தயாரித்து வருகிறது. மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.

Kalavani title clash

இந்த நிலையில் அதே களவாணி டீமை வைத்து களவாணி 2 படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார் சற்குணம். அந்தப் படத்துக்கு கே 2 என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக்கையும் சிவகார்த்திகேயனை வைத்து வெளியிட்டார். விமல், ஓவியா நடிக்கிறார்கள்.

உடனே அதற்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் களவாணி 2 படத்தை தாங்களே தயாரிக்கப் போவதாக ஷெராலி பிலிம்ஸ் நசீர் அறிவித்துள்ளார். 'களவாணி 2' படத்திற்கான படத்தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

English summary
Director Sargunam and producer Naseer have clashed for Kalavani 2 title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil