»   »  கார்த்திக் நரேன் படத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் மகன்கள்... விரைவில் அறிவிப்பு!

கார்த்திக் நரேன் படத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் மகன்கள்... விரைவில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கார்த்திக் நரேன் படத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் மகன்கள்- வீடியோ

சென்னை : முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் 'துருவங்கள் 16' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் அடுத்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கிவருகிறார்.

'நரகாசூரன்' படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கார்த்திக் நரேன் இயக்கும் மூன்றாவது படத்திற்கு 'நாடகமேடை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், காளிதாஸ் ஜெயராம் மற்றும் ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர்.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நரகாசூரன்

நரகாசூரன்

'நரகாசூரன்' படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தப் படத்தை கௌதம் மேனன் தயாரித்து வருகிறார். இப்படம் ரிலீஸாகும் முன்னரே கார்த்திக்கின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடக மேடை

நாடக மேடை

கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்திற்கு 'நாடக மேடை' என டைட்டில் வைத்துள்ளனர். நைட் நாஸ்டால்ஜியா ஃபிலிமோடெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இப்படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார்.

நடிகர்கள்

நடிகர்கள்

கார்த்திக் நரேன் இயக்கவுள்ள 'நாடக மேடை' படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், காளிதாஸ் ஜெயராம் மற்றும் ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் மகன்கள் இருவர் நடிப்பதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரகுமான்

ரகுமான்

மேலும் 'துருவங்கள் பதினாறு' படத்தில் நாயகனாக நடித்த ரகுமான் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
'D16'Director Karthick Naren's third film is titled 'Naadaga medai'. Actors Gautham Karthik, Kalidas Jayaram and Rahman are acting in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil