Don't Miss!
- News
"சீக்ரெட் மெசேஞ்.." கஞ்சா கும்பல் தப்பிக்க உதவிய எஸ்ஐ.. தட்டி தூக்கிய போலீஸ்! கோவையில் அதிரடி கைது
- Lifestyle
ஆண்களே! பெண்களின் உச்சக்கட்டம் பற்றி நீங்க நினைக்கிறது தப்பாம்... அப்ப நீங்க எப்படி செயல்படனும் தெரியுமா?
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
தனுஷ் இயக்கத்தில் விக்ரம் பட நடிகரா..? டைட்டிலே செம்ம மாஸா இருக்கே... அடிபொலி அப்டேட்
சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவான தனுஷ், 2017ல் பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.
ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா நடிப்பில் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
அதன்பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தனுஷ் மீண்டும் ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் யார் யார் நடிக்கவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அது செம்ம Script... ஆனா அதுல அஜித்துக்கு பதிலா தனுஷ் தான்: ஹெச் வினோத் இப்படி பண்ணலாமா?

இயக்குநர் சீட்டில் தனுஷ்
துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், இன்னும் அதே இளமை மாறாமல் கலக்கி வருகிறார். 2022ம் ஆண்டில் மட்டும் தனுஷ் நடிப்பில் 5 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் தி கிரே மேன், பாலிவுட்டில் அத்ரங்கி ரே, கோலிவுட்டில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களில் தனது வெரைட்டியான நடிப்பால் ரசிகர்களை என்டர்டெயின் செய்திருந்தார். தனுஷ் நடிப்பில் அடுத்து வாத்தி திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே தனது இரண்டாவது படத்தை இயக்கும் முடிவில் தனுஷ் தீவிரமாக வேலை பார்த்து வருகிறாராம்.

இணையும் மெகா கூட்டணி
2017ம் ஆண்டு பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோருடன் படத்தை இயக்கிய தனுஷும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திந்தார். பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ராஜ்கிரன் - ரேவதி இருவரின் காதலை பின்னணியாக வைத்து உருவாகியிருந்தது. ஆனால் தனுஷ் இரண்டாவதாக இயக்கவுள்ள படம் முற்றிலும் வேறு ஜானராக இருக்கும் என சொல்லப்படுகிற்து. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மெகா கூட்டணியுடன் களமிறங்கவுள்ளாராம் தனுஷ்.

விக்ரமன் பட நடிகர்
நீண்ட நாட்களாகவே இரண்டாவது படத்திற்கான கதையை எழுதி வந்த தனுஷ், தற்போது அதனை முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இது பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தான் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதேபோல் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.

மாஸ்ஸான டைட்டில்
தனுஷ் இயக்கவுள்ள படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பார் என முதலில் சொல்லப்பட்டது. அதன்பின்னர் தான் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் தனுஷ் இயக்குநராக மட்டும் பணிபுரிவார் எனவும், நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தனுஷ் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'ராயன்' என்றும் சொல்லப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதன் டைட்டில் தான் ராயன் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது தனுஷ் இயக்கும் படத்திற்கு தான் ராயன் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.