twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கோடி தந்த தாணு… வெற்றிமாறனின் அடுத்த அடி

    |

    தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்

    இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ஆனவர்.

    இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றிமாறன் துவங்கியுள்ள கலை பள்ளிக்கு, கலைப்புலி தாணு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    வெற்றிமாறன் மாதிரி என்னால படம் எடுக்க முடியாது... பிரம்மாண்ட இயக்குனர்!வெற்றிமாறன் மாதிரி என்னால படம் எடுக்க முடியாது... பிரம்மாண்ட இயக்குனர்!

    வெற்றி இயக்குனர் வெற்றிமாறன்

    வெற்றி இயக்குனர் வெற்றிமாறன்

    பொல்லாதவன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான வெற்றிமாறன் முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து ஆடுகளம் படத்தின் மூலம் மதுரை மக்களின் எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். ஆடுகளம் படம் விருதுகளை அள்ளி குவித்தது. அதிகபட்சமாக பல தேசிய விருதுகளை வாரிக் குவித்தது. நடிகர் தனுஷ் அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அதைத்தொடர்ந்து நார்த் மெட்ராஸ் கதைக்களமாக கொண்டு வடசென்னை படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். வெற்றிமாறன் 2019ஆம் ஆண்டு அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் வர்த்தக ரீதியாகவும் கலை சார்ந்த படமாகவும் ஒட்டுமொத்த மக்களால் பாராட்டப்பட்டது.

    வெற்றிமாறனின் கலைப் பள்ளி

    வெற்றிமாறனின் கலைப் பள்ளி

    இயக்குனர் வெற்றிமாறன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் அண்ட் கல்ச்சர் என்ற கலை பள்ளியை துவங்கியுள்ளார். பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான இடமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் சேர முதலில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு பிறகு பிலிம் இன்ஸ்டியூட் சம்பந்தப்பட்ட ஆட்கள் தேர்வான மாணவர்களின் வீடுகளுக்குச் நேரில் சென்று அவர்கள் உண்மையில் பொருளாதார ரீதியாக பின்னில் இருக்கிறார்களா என சோதனை செய்து தெரிந்து கொள்கின்றனர்.

    வசதிகள் செய்து தரப்படும்

    வசதிகள் செய்து தரப்படும்

    மாணவர்களின் உண்மையான பொருளாதார நிலையை தெரிந்து கொண்ட பிறகு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். படிப்பு உணவு ஹாஸ்டல் வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தந்து அவர்களை கலைத்துறையில் மிகச் சிறந்த மாணவர்களாக மாற்றப்படுவார்கள் என வெற்றிமாறன் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னர் வெற்றிமாறனின் குருநாதரான பாலுமகேந்திரா, பாலு மகேந்திர சினிமா பட்டறை எனும் கலைப் பள்ளியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தாணுவின் ஒரு கோடி நன்கொடை

    தாணுவின் ஒரு கோடி நன்கொடை

    வெற்றிமாறன் துவங்கிய இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் அண்ட் கல்ச்சர் அமைப்பிற்கு தயாரிப்பாளர் தாணு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த அமைப்பிற்கு ஒரு கோடி நன்கொடை செய்த முதல் நபர் இவரே ஆவார். வெற்றிமாறனின் தாய் அதைப் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறனின் கலைப் பள்ளியில் படித்து முடித்தபின் வெற்றிமாறன் தேர்வு செய்யும் ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு வி கிரியேஷன்ஸில் படம் இயக்கும் வாய்ப்பு தரப்படும் என தெரிவித்துள்ளார். இந்த கலைப் பள்ளி பல பின்தங்கிய மாணவர்கள் சாதிக்கும் ஒரு இடமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    English summary
    Kalipuli S thanu Donated 1 Crore for Arts School Started by Vetrimaran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X